உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு

சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்: பிரதமர் மோடி பேச்சு

வாரணாசி: சிறு கைவினைக் கலைஞர்களை பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவாக உள்ளேன். சிறு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களின் தூதராக செயல்பட்டு வருகிறேன்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். காலை வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்துப் பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், பிறகு துறவி குரு ரவிதாசின் 647 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, வாரணாசியில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வாரணாசியில், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உறுதி பூண்டுள்ளேன். சிறு கைவினைஞர்களை பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு நான் குரல் கொடுத்து வருகிறேன். சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.குடும்ப அரசியல், ஊழல் மற்றும் சமரச அரசியல் காரணமாக உ.பி., வளர்ச்சியில் பின் தங்கியது. காங்கிரசின் இளவரசர், காசி, மற்றும் உ.பி., இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது. அவர்கள் உ.பி., இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இளைஞர்கள் தங்களது மாநிலத்தை கட்டமைத்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பரிசு

ஹிந்து பனாரஸ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக காசி ரோப்வே பணிகளையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

நள்ளிரவில் ஆய்வு

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று உ.பி., சென்றடைந்தார். இரவு நேரத்தில், சமீபத்தில் அமைக்கப்பட்ட ரூ.360 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஷிவ்புர் - புல்வாரியா 4 வழிச்சாலையை ஆய்வு செய்தார். உடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்தார். இதனையறிந்த மக்கள் மோடியை பார்க்க குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 21:02

பிஜேபி அரசால் பொருளாதாரம் றெக்கைகட்டிக்கொண்டு பறக்கிறது. மேலும் மேலும் விண்ணை நோக்கி வேகமெடுக்கிறது. இருபத்திநான்கு வயதில் ஐந்து சதவீத தமிழக இளைஞர்கள் ஐடி வேலைவாய்ப்பில் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாரிக்கிறார்கள். பத்து சதவீத இளைஞர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள். ஐம்பது சதவீத இளைஞர்கள் குறைந்தது மாதம் அறுபதாயிரம் சம்பாரிக்கிறார்கள். அனைத்தும் சாத்தியமானது மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் தான். பல கம்பெனிகள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் பலர் ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்கிறார்கள்.


Arachi
பிப் 23, 2024 19:39

பொய் பேசுவதற்கு ஒரு அளவு வேண்டாமா. இன்றைய தகவல் படி நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயிகள் ஐந்து பேரின் இன்னுயிர்கள் பறிபோய் இருக்கின்றன. ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லையா. இந்த விவசாயிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாவது முறையாக நடக்கும் மிகப் பெரிய போராட்டம். டிப்டாப்பா இருக்கவா இந்த பதவி.


hari
பிப் 23, 2024 20:06

அரைச்சி அரைச்சி எவளோ மாவு அரைச்சாலும் உன் மாவு இங்கே வேகாது....... மோடி கிட்டே வேகாது


DVRR
பிப் 23, 2024 17:05

இப்போது விவசாய போராட்டம் என்ற நடிப்பில் அவர்களின் தூதராக அல்ல என்று சொல்கின்றார் Cut and Right ஆக


மேலும் செய்திகள்