உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

கோல்கட்டா: நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இன்று காலை கடுமையான நெஞ்சுவலி காரணமாக கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மிதுன் சக்கரவர்த்தி இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான யாகாவாரயினும் நாகாக்க என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.இன்று காலை கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ