உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெட்டுகளுடன் வெளியாகிறது கங்கனா நடித்த எமர்ஜென்சி

வெட்டுகளுடன் வெளியாகிறது கங்கனா நடித்த எமர்ஜென்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தின் புதிய படமான, 'எமர்ஜென்சி' திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மறுசீரமைப்புக் குழுவால், பரிந்துரைக்கப்படும் சில வெட்டுகளுடன் வெளியிடப்படும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வரலாற்றுத் தவறுகள் மற்றும் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக புகார்கள் எழுந்ததால் சிக்கலில் சிக்கியது. 1975ல் அப்போதைய பிரதமர் இந்திராவால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர், மஹிமா சவுத்ரி மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளை கட் செய்து வெளியிடலாம் என மத்திய தணிக்கை வாரியம் கோர்ட்டில் இன்று தெரிவித்தது. ரிவைசிங் கமிட்டி எனப்படும் மறுபரிசீலனை குழுவால் பரிந்துரைக்கப்படும் வெட்டுகளுடன் படத்தை வெளியிட அனுமதிப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

வாய்மையே வெல்லும்
செப் 27, 2024 05:24

இண்டிக்கூட்டணி திருடர்களின் தூக்கத்தை கெடுக்கும் படம் எமெர்ஜெண்சி... அடுத்த படம் திரையில் கண்டுகளிக்க .. ரோஜாமலரே ராஜகுமாரி அதில் நேரு கதாபாத்திரத்தில் நேகரு அங்கிள் போல முன்னணி நடிகர்களை காணலாம் .


Rajan
செப் 26, 2024 23:14

என்ன, எதிர் கட்சி தலைவி வரும் இடங்களில் கட் பண்ணி இருப்பாங்க. படம் வெறும் பப்படமாக இருக்கும்


வாய்மையே வெல்லும்
செப் 26, 2024 23:10

நண்டு திருட்டு ட்ராவிடிய குள்ள நரிகளை கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை கொசுத்தொல்லை யணா


Nallappan
செப் 26, 2024 19:53

இந்திரா காந்தியை ஒரு வகையில் அயன் லேடி என்று எடுத்து கொள்ளலாம் ஆனால் நேரு சரியானபடி அடித்தளம் அமைக்கவில்லை ஏகப்பட்ட ஓட்டைகள் அதுவே இன்றளவும் பல சிரமங்களுக்கு காரணம்...


ஆரூர் ரங்
செப் 26, 2024 22:27

அவர் அயர்ன் லேடியா அ‌ல்லது இஸ்திரி லேடியானு தெரியாது. ஆனா தன்னை ஏற்றி விட்ட ஏணியான காமராஜரை அவமதித்தது உண்மை. அவசரநிலை காலத்தில் அரசியல் சட்டத்தின் அடிப்படையையே திருத்தி சிதைத்தது, நீதித்துறையை தன்னிஷ்டத்திற்கு ஆட்டி வைத்தது போன்ற தேசவிரோத ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட பெண்.


Rajan
செப் 26, 2024 23:20

நீங்கள் கூறுவது கான் கட்சியின் மாய சித்தரிப்பு. நாடு குட்டிச்சுவரானதற்கு முக்கிய காரணமே அவர்கள் எடுத்த பயங்கர முடிவுகள் தான். அப்போது மீடியாவும், அரசியல் தலைவர்களும் பட்ட பாட்டை பார்த்திருந்தீர்களா என்று தெரியவில்லை. எமெர்ஜன்ஸி ஒரு கருப்பு புள்ளி தான். ஜனநாயகம் நசுக்க படுகிறது என்று ஊளையிடும் பப்பு கேங்க் அதை பற்றி பேச முடியாது


Sathyanarayanan Sathyasekaren
செப் 27, 2024 03:06

இந்திரா போலி காந்தி கான் ஒன்றும் அயன் லேடி அல்ல.


Easwar Kamal
செப் 26, 2024 18:56

பிஜேபி கரனுங்க சும்மா வாயுக்கு வந்த மாதிரி பேசிகிட்டு இருபனுவ. idragandhi என்றைக்குமே iron லேடி தான். இன்னைக்கு வரைக்கும் மணிப்பூர் பக்கம் தலை காட்டினது கிடையாது. பிரதமர் மீது எவ்வளவோ குறைகள் சொல்லலாம். அதை போன்று இந்திராகாந்திக்கும் இருக்கும். ஆனால் ஒன்று மறக்கக்கூடாது இந்திராகாந்தி மற்றும் நேரு போன்றோர் அமைத்து வாய்த்த பாதையில் தான், நாங்களும் இந்த அரசியல்வாதிகளும் பயணித்து கொண்டு இருக்கிறோம்.


Barakat Ali
செப் 26, 2024 19:06

உண்மை ..... அவர்கள் வகுத்து வைத்த போலி மதச்சார்பின்மை ங்கிற பாதையில்தான் நாம் பயணிக்கிறோம் ......


Ganesun Iyer
செப் 26, 2024 20:39

எப்புடி, நம்ம முதல்வர் வேங்கை வயல சுத்தி பாத்த மாதிரியா..


Rajan
செப் 26, 2024 23:21

சூப்பர் சிரிப்பு பீஸ்ண்ணா.


Sathyanarayanan Sathyasekaren
செப் 27, 2024 03:12

அமெரிக்காவின் ஆட்டத்திற்கு பயந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த லேடி. அயன் லேடி என்வது கட்டமைக்கப்பட்ட பொய்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 26, 2024 18:12

கங்கானாவின் உயிருக்கு காலிஸ்தானிகளால் ஆபத்து ஏற்படலாம் ........ பாஜக காப்பாற்றாது .....


Narayanan Muthu
செப் 26, 2024 20:09

நண்டு கொழுத்து வலையில் தங்காமல் திரிந்தால் நரிகள் வேட்டையாடத்தான் செய்யும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை