உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது மாடியில் இருந்து குதித்த மஹா., துணை சபாநாயகர்; காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

3வது மாடியில் இருந்து குதித்த மஹா., துணை சபாநாயகர்; காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பழங்குடியினர் பட்டியல் பிரிவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர். இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:பழங்குடியினர் பட்டியல் பிரிவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிராவில் மந்தராலயா என அழைக்கப்படும் தலைமைச்செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்து. துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மந்த்ராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்தனர். முன்னெச்சரிக்கையாக, விரைந்து வந்த போலீஸ் நடவடிக்கையால், மாடிகளுக்கு இடையே வலை விரிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர். நர்ஹரி ஜிர்வால், தேசிய வாத காங்கிஸ் கட்சி(அஜித் பவார் அணி)யை சேர்ந்தவர். அவருடன் இருந்த 3 எம்.எல்.ஏ.,க்களும் அதே கட்சியை சேர்ந்தவர்கள்.முன்னதாக, காலையில் பழங்குடியினர் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தலைமைச்செயலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ராமகிருஷ்ணன்
அக் 05, 2024 06:43

சுத்த கருணாநிதிதனம், ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து டூபாகூர் போராட்டம்.


nagendhiran
அக் 04, 2024 18:51

வலை இருக்கும் தைரியத்தில் குதித்து இருப்பானுங்க?


R.MURALIKRISHNAN
அக் 04, 2024 18:38

நடிப்பு,நாடகமே உலகம்


sankaranarayanan
அக் 04, 2024 18:36

மஹாராஷ்டிராவில் துணை சபாநாயகர் சபைக்கு செல்லாமல் வெளியே வலைக்கு சென்றிருக்கிறார் என்ன காரணம் என்றே தெரியவில்லையே வலையில் தான் மாட்டிக்கொள்ளவா அல்லது அடுத்தவர்களை மாட்டிவிடவா இவர் இதுபோன்று குதிப்பார் என்று வலை ஏற்பாடு செய்யப்பட்டதா


Yaro Oruvan
அக் 04, 2024 18:15

அதுல பாருங்க. வலய கட்டுற வரைக்கும் வெயிட் பண்ணீருக்கானுவ ஜம்புலிங்கங்க


Yaro Oruvan
அக் 04, 2024 18:13

எதுக்குயா வலய கட்டுனீங்க போலீஸ்.. நல்ல சான்ஸ்.. மிஸ் ஆயிருச்சு


என்றும் இந்தியன்
அக் 04, 2024 17:56

வலை கட்டியிருந்ததை பார்த்து இந்த ஐடியா தோன்றி இப்படி செய்தார்கள் அதுவே வலை கட்டாமல் இருந்திருந்தால் நிச்சயமாய் இந்த முயற்சி செய்திருக்கவே மாட்டார்கள்


Neutrallite
அக் 04, 2024 17:38

தற்கொலை முயற்சிக்காக கைது செய்தார்களா இல்லையா?


chennai sivakumar
அக் 04, 2024 20:06

மிக சரியான கருத்து


Mani
அக் 04, 2024 17:14

வலை கட்டாமல் இருந்திருந்தால் குதித்திருக்க மாட்டார்கள்


Narayanan Muthu
அக் 04, 2024 17:10

முன்கூட்டியே சொல்லிவைத்து பாதுகாப்பு வலைகள் கட்டப்பின்பு குதித்துள்ளார்கள் போலெ. என்னே ஒரு அரசியல் கோமாளித்தனம்


Neutrallite
அக் 04, 2024 17:38

உங்க கூட்டணி கட்சி தா அப்பு...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 04, 2024 19:20

லைட்டு ...... சாரி .... ட்யூப் லைட்டு ..... அவரும் குறைதான் சொல்லியிருக்காரு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை