மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
1 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
3 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
3 hour(s) ago
போபால்: நிலத்தின் முதல் உரிமையாளர் ஆதிவாசி தான் என ம.பியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் பத்னாவரில் இளைஞர் உரிமைப் பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் ஆகியோர் உரையாற்றினர். அப்போது, ராகுல் பேசியதாவது: ஆதிவாசிகள் மட்டுமின்றி, தலித்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் எங்கு பார்த்தாலும் அவமரியாதை செய்யப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன் ஆதிவாசிகளை வனவாசி என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆதிவாசிக்கும் வனவாசிக்கும் என்ன வித்தியாசம்?.ஆதிவாசி தான் இந்த நிலத்தின் முதல் உரிமையாளர். பா.ஜ., அரசின் அநீதி, அட்டூழியங்களால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர். அநீதிக்கு எதிரான போரில் மக்களுடன் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. 2 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவைக் கைப்பற்றியுள்ளனர். ஜி.எஸ்.டி கொண்டு வந்ததால், சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ.,வின் நோக்கம்
காங்., தலைவர் கார்கே பேசியதாவது: விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாற வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். பா.ஜ., தலைவர்கள் பேசும் போதெல்லாம் காங்கிரசாரை விமர்சித்து வருகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன். விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதர விலை கொண்டு வருவோம் என்று கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago