உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா: ஆட்களை தேர்வு செய்ய விளம்பரம் வெளியீடு

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா: ஆட்களை தேர்வு செய்ய விளம்பரம் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், விரி விகிதம் காரணமாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.மேலும், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் துவக்கி உள்ளது.இதன்படி 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை 'லிங்க்ட் இன்' சமூக வலைதளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டில்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:07

அதானி உடனான வழக்கை தள்ளுபடி செய்ததற்காக செஞ்சோற்றுக்கடன் தீர்க்கிறார். ரெம்ப ஃபீலிங்ஸ் ஆக இருக்கு. அவ்வ்வ்வ்..


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 23:05

பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து. மோடிஜி சிங்கம்லா..


சிவதாஸ்
பிப் 18, 2025 16:07

டெஸ்லாவுக்கும், ஹார்லி டேவிட்சனுக்கும் 100 சதவீத வரி இருந்ததால்தான் அவிங்க இங்கே வரமுடியலை. ஜீ போய் வரியை 70 சதவீதம் குறைச்சாச்சு. இனிமே அவிங்க கார்விக்கலாம். கூடுதல் விலைக்கு நம்மகிட்டே வித்துருவாங்க. டெஸ்லாவில் நம்ம குப்பனும், சுப்பனும்.போகணுமில்ல.


ஆரூர் ரங்
பிப் 18, 2025 16:42

முதல் அன்னிய கார் நிறுவனம் ( மாருதி) சுஸூகி யை அரசுப் பங்களிப்புடன் துவக்கியது காங்கிரஸ் அரசு. அதற்குமுன் தகர செட் ஒன்றில் செயல்படாமல் சும்மா கிடந்த மாருதி கார் நிறுவனத்தை இந்திரா ஆறு கோடி அரசு நிதியைக் கொண்டு அரசுடைமையாக்கி அந்தப் பணத்தையும் பாக்கட்டில் போட்டுக் கொண்டார். வரலாறு முக்கியம் பாய்.


KavikumarRam
பிப் 18, 2025 13:59

இந்தியா பக்கமே தலை வச்சு படுக்க மாட்ட.


Sivagiri
பிப் 18, 2025 13:33

அய்யய்யோ, நம்ம திராவை - ஆளுங்க அமெரிக்காவுக்கு சைக்கிள் வாங்கத்தான் போனார்களா ? . . அதுவும் டெஸ்ட் ரைட் பண்ணிட்டு வாங்காம வந்துட்டாங்களோ ? . .


Ramesh Sargam
பிப் 18, 2025 13:30

மோடியா, கொக்கா, அமெரிக்கா சென்றார், மஸ்க்கை சந்தித்தார். இப்பொழுது சாதித்தார். எதிர்கட்சியினருக்கும், தேசதுரோகிகளுக்கும் இது கசப்பான செய்தி.


m.arunachalam
பிப் 18, 2025 15:32

மோடிஜி எது செய்தாலும் சாதனையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை