உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை

ஆமதாபாத் விமான விபத்து : வெளியானது முதற்கட்ட அறிக்கை

புதுடில்லி: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரு இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது.இதில் ஒரேயொரு பயணியை தவிர, 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து, விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்துள்ளது..இதன் அறிக்கையை பார்லிமென்ட் குழுவிடம் சம்பித்துள்ளது. இதன் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12) நள்ளிரவு வெளியானது. அந்த அறிக்கையில், சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு நேற்று (ஜூலை 11) அறிக்கை வெளியிட இருந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கோமாளி
ஜூலை 12, 2025 09:44

தத்தியின் அறிக்கை போல இருக்கிறது


Indian
ஜூலை 12, 2025 09:01

இரண்டு என்ஜின் களும் சேர்த்தாப்புல பழுதடையும் அளவுக்கு தான் பராமரிப்பு உள்ளதா ???. ஏன் எமிரேட்ஸ் , கத்தார் , போன்ற விமான நிறுவனங்களில் விமானம் என்ஜின் இது போன்று பழுதாவதில்லை ??. ஏதாவது எமிரேட்ஸ் , கத்தார் விமானம் இது போன்று பொத்தென்று விழுந்தது உண்டா ??


vj
ஜூலை 12, 2025 08:28

Dead men tell no tales. Boeing will blame the pilots 100%.


subramanian
ஜூலை 12, 2025 07:55

உண்மை உறங்கும் நேரம்


K V Ramadoss
ஜூலை 12, 2025 07:22

விமான எஞ்சின்கள் இரவண்டும் சேர்ந்தாற்போல் திடீரென பழுதானதற்கு காரணம் ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2025 07:05

ஆரம்பத்தில் இரண்டு என்ஜின்களும் பழுது என்றுதான் சொல்லுவார்கள். அடுத்தடுத்துவரும் அறிக்கைகளில் பெட்ரோல் வழியை விமானி தவறுதலாக அடைத்தார் என்று சொல்வார்கள். அல்லது அகமதாபாத் விமான நிலையத்தில் பெட்ரோல் டாங்கில் இறந்துகிடந்த எலியின் உடல் பெட்ரோல் செல்லும் பாதையை அடைத்தால் என்ஜின்கள் செயலிழந்து விபத்து என்பார்கள். அதாவது முதலில் போயிங் நிறுவனத்தின் தவறு என்பார்கள். அப்புறம் விமானி மீது தவறு என்பார்கள். கடைசியில் விமான நிலைய துப்புரவு பணியில் குறைபாடு என்று சொல்லி ஏதாவது ஒரு அப்பிராணியை வேலையை விட்டு தூக்குவார்கள். அவன் செட்டில்மென்ட் வாங்கிக்கொண்டு வேறொரு ஏற்போர்ட்டுக்கு வேலைக்கு போய்விடுவான். செத்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 கோடி. கேஸ் முடிந்தது. பஞ்சாத்து கலைந்தது.எல்லோரும் வீட்டுக்கு போ... போ... போ...


Srinivasan Narayanasamy
ஜூலை 12, 2025 02:52

உப்புசப்பில்லாத மோசமான அறிக்கை.


கட்டத்தேவன்,திருச்சுழி
ஜூலை 12, 2025 06:11

இன்னும் எத்தனை கட்ட ஆய்வு அறிக்கைக்கு பின் இந்த விமான விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை