உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை வாங்க விமானப்படை பரிந்துரை

ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை வாங்க விமானப்படை பரிந்துரை

புதுடில்லி : உள்நாட்டில் தயாரிக்கப்படும் 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை வாங்க, இந்திய விமானப்படை மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளன.இதுகுறித்து ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்படும் 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை வாங்க, இந்திய விமானப்படை சார்பில் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அமைச்சகம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது. இதில் ஆறு ட்ரோன்கள் விமானப்படையும், நான்கு ட்ரோன்கள் கடற்படையும் பயன்படுத்த உள்ளன.இந்த 'தப்பாஸ்' ட்ரோன்களை டி.ஆர்.டி.ஓ., என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையிடம், இஸ்ரேலின் செர்ச்சர், ஹெரான் மார்க் 1 மற்றும் மார்க் 2 ஆகிய ட்ரோன்கள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
ஜூன் 25, 2024 11:14

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். டிரோன்கள் ஆயிரம் வாங்கி, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உலவ விட்டு கண்காணிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை