உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 135 பயணிகள் பீதி

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: 135 பயணிகள் பீதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக தரை இறக்கப்பட்ட விமானம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. தனிமையான இடத்துக்கு கொண்டு சென்று பத்திரமாக நிறுத்தினார் விமானி. குண்டு மிரட்டல் தகவல் பரவியதும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கமாண்டோ படையினர், வெடிகுண்டு கண்டறியும் படையினர், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.'பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 135 பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 22, 2024 10:38

ஏர் இந்தியா விமானங்களில் பயணிப்பதே திக் திக். அந்த அளவுக்கு படுமோசமான பராமரிப்பு. இதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பயனியர்களை மிரட்டுவதா...?


Sampath Kumar
ஆக 22, 2024 10:36

சுத்த வாஸ்து வேண்டிக்கொண்டு எல்லாம் ...அதுவே வெடித்து விடும் அந்த நிலையில் தான் விமானம் உள்ளது


N.Purushothaman
ஆக 22, 2024 10:16

நெறைய பைத்தியக்காரனுங்க வேலை வெட்டி இல்லாமல் இந்த மாதிரி வேலை செஞ்சிகிட்டு இருக்கானுங்க .அவனுங்க மேல கடும் நடவடிக்கை எடுக்காத வரை இது தொடரும் ..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ