உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் சுப்ரியா சுலேவை எதிர்த்து மனைவியை களமிறக்குகிறாரா அஜித் பவார்?

லோக்சபா தேர்தலில் சுப்ரியா சுலேவை எதிர்த்து மனைவியை களமிறக்குகிறாரா அஜித் பவார்?

மும்பை: வரும் லோக்சபா தேர்தலில், தனது உறவினரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலேவை எதிர்த்து வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ள, மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தனது கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் சட்டசபை தேர்தலில் களமிறங்குவேன் என்றார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத நபரை களமிறக்க போவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தேர்தலில் களமிறங்கலாம் எனதகவல்கள் தெரிவிக்கின்றன.சரத்பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த்ராவ் என்பவரின் மகன் அஜித்பவார். இவர் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். இவரது தலைமையிலான கட்சி தான் தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை எதிர்த்து சரத்பவார் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே போட்டியிட உள்ளார். பாரம்பரியமாக இந்தத் தொகுதி, சரத்பவார் குடும்பத்துக்கு சாதகமான தொகுதியாக உள்ளது. இந்த முறை தனது உறவினரை எதிர்த்து வேட்பாளரை களமிறக்க அஜித்பவார் திட்டமிட்டு உள்ளார்.இது தொடர்பாக அஜித்பவார் கூறுகையில், ‛‛பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலேவை எதிர்த்து, இதுவரை தேர்தலில் போட்டியிடாத நபரை களமிறக்க திட்டமிட்டு உள்ளேன். இதில், அவர் வெற்றி பெற்றால் சட்டசபை தேர்தலில் களமிறங்குவேன்'' என்றார்.

மனைவியை களமிறக்க திட்டமா

இதனிடையே பாரமதி தொகுதியில் பிரசார வாகனம் ஒன்று உலா வருகிறது. அந்த வாகனத்தில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுனேத்ரா பவார் புகைப்படங்கள் மட்டும் இடம்பெற்று வருகின்றன. இதனை வைத்தும், அஜித் பவாரின் பேச்சை வைத்தும், சுனேத்ரா பவார், சுப்ரியா சுலேவை எதிர்த்து களமிறங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ