உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என அகிலேஷ் யாதவ் கூறுவது துரதிர்ஷ்டவசமானது'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படும்தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், 5 தொகுதிகளில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, நிருபர்களிடம் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: நான் அவ்வளவு பெரிய அரசியல்வாதி இல்ல, ஆனால் இந்த முடிவுக்கான சாத்தியக்கூறு என்னன்னு எனக்குப் புரியுது. அவங்க 200ஐத் தொடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை.இப்போது அவங்க (மஹாகட்பந்தன் கூட்டணி) யோசிக்க வேண்டும். ஒவைசி பொறுப்புன்னு அவங்க பழைய பதிவுகளை மீண்டும் போட்டா போடட்டும். அந்தப் பாட்டைப் பாடட்டும். அகிலேஷ் யாதவ் பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என சொல்ல ஆரம்பித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது தவறு. நாங்களும் தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பவில்லை. நாங்க எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். நீங்கள் தயாராக இல்ல. இது பீஹார் மக்களின் தீர்ப்பு, அதை மரியாதையா ஏற்றுக்கொள்ள வேண்டும். பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பீஹாரில் அவர் உண்மையிலேயே வளர்ச்சி அடைய விரும்பினால், சீமாஞ்சலில் நீதி நிலைநாட்ட ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைச் செய்வோம். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkataraman Subramania
நவ 15, 2025 15:01

I respect his words. He is showing much of maturity and accepting the facts unlike Rahul and Akhilesh. Both of them are passing on the bucks to the process, corrective actions of EC etc. but, actually people of Bihar intelligent people are rejecting them outrightly. Congress should be wiped out from the country for such irrational behaviours from Rahul, Jayaram Ramesh, Karge etc. Congress is unfit to rule the country after Mr. P.V. Narasimha Rao.


RAMESH KUMAR R V
நவ 15, 2025 14:59

தமிழ்நாடு பக்கம் வந்து SIR பற்றி பீகார் எலெக்ஷன் அடிப்படையில் விளக்கி சொல்லவும்.


எஸ் எஸ்
நவ 15, 2025 14:49

இவர் கொஞ்சம் சென்சிபிள் ஆக பேச கூடியவர். வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது அதை கண்டித்த ஒரே பிஜேபி அல்லாத அரசியல் கட்சி தலைவர் இவர்தான் என்பது நினைவு கொள்ள தக்கது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை