உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்

மஹா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: முதியவர்கள் புனித நீராடுவதற்காக, மஹா கும்பமேளா நடக்கும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 14ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று வரை 50 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1vz2jehe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நிருபர்களிடம் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: பிரயாக்ராஜ் நகரில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியிருக்கும். ஆனால், மாநில அரசு குறைவாகச் சொல்கிறது. வேண்டுமென்றே இதைச் செய்கின்றனர். எதிர்காலத்தில் அரசின் நிர்வாகத்தை படிக்கும் போது, அவர்களின் தோல்வி வெளிப்படும்.60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கும்பமேளாவில் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால், பல காரணங்களினால், அவர்களால் பங்கேற்க முடியவில்லை. ஒரு காலத்தில் கும்பமேளா 75 நாட்கள் நடந்தது.மன்னர் ஹர்ஷ்வர்தன் ஆட்சியின் போது, கும்பமேளா நீண்ட நாட்கள் என்ற சாதனை உள்ளது.எனவே,இம்முறை முதியவர்களின் நலன் கருதி கும்பமேளா நடக்கும் நாட்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பல்லவி
பிப் 16, 2025 11:10

122 கோடி திருடி கும்பல் கொள்ளை அடித்து என்ன பயன் அதுவும் வடக்கன் கையில் தான் இருக்கிறது போல


பல்லவி
பிப் 16, 2025 09:14

சும்மா சொன்னார் ஒன்றும் தப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை


நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 08:43

நிறைய கடைங்க போட்டவங்க சொல்லியிருப்பாங்க கிளிப்பிள்ளை கத்துது


பேசும் தமிழன்
பிப் 16, 2025 08:27

பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொகுதியில் பிஜெபி தோல்வி.. இண்டி கூட்டணி வெற்றி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்த ஆட்களுக்கு.. சட்டமன்ற இடைத்தேர்தலில்.. மக்கள் ஆப்பு அடித்து விட்டார்கள். அது இண்டி கூட்டணி ஆளை இப்படி இந்துக்கள் பெயரில் பேச வைக்கிறது.. ஆனால் இந்துக்கள் யாரும் இண்டி கூட்டணி ஆட்களை நம்ப தயாராக இல்லை.


Barakat Ali
பிப் 16, 2025 08:06

அகிலேஷ் ஹிந்துத்துவ வாக்குகள் கிடைக்க ஏங்குகிறார் .....


தாமரை மலர்கிறது
பிப் 16, 2025 01:26

இதை மோகன் பகவத் சொன்னால், அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அகிலேஷ் சொல்லும்போது, உள்குத்து என்னவென்று யோசிக்க தோன்றுகிறது.


Nandakumar Naidu.
பிப் 15, 2025 23:44

முதலில் கும்பமேளாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த இந்து விரோதி இப்போது கும்பமேளாவை நீடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார், இதில் ஒரு சூழ்ச்சி இருக்கலாம் இவரை நம்ப முடியாது. இவர் ஒரு தேச சமூக மற்றும் இந்து விரோதி. ரவுடிகளுக்கெல்லாம் தலைவர். இவர் ஒரு அழிக்க வேண்டிய தீய சக்தி.


பேசும் தமிழன்
பிப் 15, 2025 23:25

அகிலேஷ் பாய்.... இந்துக்களுக்கு என்ன தேவையோ அதை.... யோகி ஆதித்யநாத் பார்த்துக் கொள்வார்கள்..... நீங்கள் உங்கள் இண்டி கூட்டணி வேலையை பாருங்கள்.


முருகன்
பிப் 15, 2025 22:56

அப்போது தான் இன்னும் நிறைய ரயில்களின் கண்ணாடிகள் உடைக்கப்படும்


கிஜன்
பிப் 15, 2025 21:45

அப்பா கிட்ட இருந்து கொஞ்சம் விஷயங்களை கற்றிருக்கலாம் .... வாரிசு அரசியல் எப்படி அறிவற்றது என்பதை நிரூபிக்கிறார் .... கும்பத்திலிருந்து சூரியபகவான் சென்ற பிறகு எப்படி கும்ப மேளா நடத்த முடியும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை