உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்

அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்

லக்னோ: இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அல்கொய்தா பயங்கரவாதியை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படையினர் வெளியிட்ட அறிக்கையில்; அல்கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டான். இவருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 4000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் எண்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wb7cctr8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளைப் பெற்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அல் கொய்தா இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் பிறந்த ஆசிம் உமர் என்பவனால், பிலால் கான் பயங்கரவாத செயல்களில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளான். ஆசிம் உமர், அல் கொய்தா தலைவர்களான ஒசாமா பின் லேடன் மற்றும் அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோரால் நியமிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிம் உமரின் கருத்துக்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு பிலால் கான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளான். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் தங்களின் ஆதரவாளர்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளான். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை பரப்ப முயற்சித்து வந்துள்ளான்.மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்து பிலால் கான், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளான். பாகிஸ்தானை ஆதரிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்ததோடு, காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளான், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
நவ 08, 2025 18:22

தயவு செய்து கைது ஜெயில் வேண்டவே வேண்டாம் பாவம் அல்லா உங்களை சபிப்பார் ஆகவே அவனை அவன் மாதிரி ஆட்களை அல்லாஹ்விடமே அனுப்பி விடவும் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டு வரவேற்பார்


Rathna
நவ 08, 2025 15:49

பிஜேபி யும் தீவிரவாத கும்பல்களை பார்த்து பயப்படுகிறது. தைரியத்தில் யோகி மட்டும் வித்தியாசம்.


நிக்கோல்தாம்சன்
நவ 08, 2025 14:17

அந்த பிலால்கானை திருமா வீட்டு பழிவாங்க வேண்டும்


KOVAIKARAN
நவ 08, 2025 08:53

தேச துரோகியான, இந்த தீவிரவாதியை, விசாரணைக்கைதியாகக் கருதாமல், விசாரணையின்றி, காலம் தாழ்த்தாமல் உடனே தூக்கில் போடவேண்டும். அல்லது encounter ல் போட்டுத்தள்ளவேண்டும். இப்படிச் செய்தால் தீவிரவாதியாக மாறப்போகும் தேசத்துரோகிகளுக்கு பயம் வரும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 08, 2025 10:24

நீங்க சொல்றமாதிரி செஞ்சா பாஜகவுக்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காதுங்களே >>>>


V Venkatachalam, Chennai-87
நவ 08, 2025 20:41

தர்ம ராஜ் தங்க ரத்தினம் கணக்கு ரொம்ப வீக். அஜ்மல் கசாப் 2012 நவம்பர் 21 அன்று மிகவும் ரகசியமாக தூக்கிலிப்பட்டான். அதுனாலதான் மனாமோகன்சிங் கட்சி தோற்றுவிட்டதா? இதென்ன மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு? ஒவ்வொரு மசூதியிலும் மோடிக்கு ஓட்டு போட கூடாதுன்னு தொடர் பிரச்சாரம் நடந்து கிட்டுதானே இருக்கு. இனிமே புதுசா வா நடக்கபோவுது?


முக்கிய வீடியோ