உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; ராணுவ சுபேதார் உள்பட இருவர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; ராணுவ சுபேதார் உள்பட இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் ரகசியங்கள் மற்றும் பாதுகாப்பு தகவல்களை பாகிஸ்தான் சட்டவிரோதமாக திரட்டி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய ராணுவம், பாகிஸ்தான் உளவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியா தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து வந்த பெண் உள்பட இருவரை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். கோவாவைச் சேர்ந்த ராஷ்மின் ரவீந்திரா பால் என்ற பெண்ணையும், டாமனைச் சேர்ந்த ஏகே சிங் என்பவரையும் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஏகே சிங் ராணுவத்தில் சுபேதாராக இருந்து வருகிறார். இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இந்தியா தொடர்பான ரகசிய தகவல்களை இருவரும் பகிர்ந்து வந்துள்ளனர். சுபேதார் ஏகே சிங், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு பண உதவிகளை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ