உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 மணி நேரமும் இயங்க ஹோட்டல்களுக்கு அனுமதி?

24 மணி நேரமும் இயங்க ஹோட்டல்களுக்கு அனுமதி?

பெங்களூரு: தினமும் 24 மணி நேரமும் ஹோட்டல் திறந்திருக்க அனுமதி அளிக்கும்படி, மாநில அரசிடம், ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹோட்டல்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும்படி, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது. சமீபத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.கேரளாவில் 24 மணி நேரமும், ஹோட்டல்கள் செயல்படுகின்றன. அதேபோன்று கர்நாடகாவிலும் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அரசும் சாதகமான பதில் அளித்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.அரசு அனுமதி அளித்தால், இரவு ஷிப்ட் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஊழியர்கள், வெளியூர்களில் இருந்து வரும் பயணியருக்கு உதவியாக இருக்கும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்பது, ஹோட்டல் உரிமையாளர்களின் எண்ணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி