உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி- ராகுல் சந்திப்பு

பிரதமர் மோடி- ராகுல் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ராகுலை சந்தித்து பேசினர். ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=559m6sqq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லி., குளிர்க்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கியது. இந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நேற்று (டிச.,17) லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.,18) பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ராகுலை சந்தித்து பேசினர். ஆலோசனையில் அமித்ஷா, ஓம் பிர்லா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M.Srinivasan
டிச 19, 2024 12:58

சந்திப்பின் முடிவு என்ன? என்ன பேசினார்கள்?


AMLA ASOKAN
டிச 18, 2024 19:36

2024 தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத காரணத்தால் மோடி ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்ய வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டு விட்டார் . ராகுல் காந்தியையும் கார்கேயையும் ஆலோசித்து தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்பதையும் உணர்ந்து விட்டார் . இப்படி செயல்பட்டால் பார்லிமென்ட் விவாதங்கள் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம் . மத்திய அரசும் முக்கியமில்லாத , தேவையற்ற , சர்ச்சைக்குரிய மசோதாக்களை தவிர்க்க வேண்டும் .


subramanian
டிச 19, 2024 23:15

அம்லா அசோகன், ராகுல், கார்கே வை ஆலோசனை செய்து மசோதா எதுவும் செய்ய வேண்டும் என்ற அவசியம் மோடி அரசுக்கு இல்லை. அரசியல் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்த செய்தியை நீங்கள் சரியாக படிக்கவில்லை


V Gopalan
டிச 18, 2024 16:34

Why the BJP MPs including the Minister Shri Nithin Gadkari were absent?


கல்யாணராமன்
டிச 18, 2024 16:04

ராகுல் பிரதமரை சந்தித்தாரா? பிரதமர் ராகுலை சந்தித்தாரா? பிரதமர் அலுவலகத்தில் ராகுலை பிரதமர் சந்தித்தார் என்றால் அவரை வர சொல்லி இவர் சந்தித்தாரா? அவரே வந்து இவரை சந்தித்தாரா?


Narayanan
டிச 18, 2024 14:55

ராகுல் பிரதமரையோ, பிரதமர் ராகுலையோ சந்திக்கட்டும் எது எப்படியோ அமைதியான முறையில் நாட்டு மக்களின் நலன் கருதிபாராளுமன்றம் நடக்க ஒத்துழைத்து ஆக்கபூர்வமான முடிவுகள் கொண்டு வரட்டும் .75 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாதிரி நாடு இன்று இல்லை . எனவே காலத்திற்கு தகுந்தாற்போல் அரசியல் சாசனத் திருத்தம் , முன்னர் இந்திராகாந்தி செய்ததுபோல் கொண்டுவாருங்கள் .


sundarsvpr
டிச 18, 2024 14:25

பிரதமர் அலுவலகத்தில் ராகுலை பிரதமர் சந்தித்தார் என்றால் ராகுல் அவராக வந்தாரா பிரதமர் அழைத்து ராகுல் வந்தாரா?


Admission Incharge Sir
டிச 18, 2024 15:00

எதுவாக இருந்தாலும் என்ன, பிரதமரின் பொன்னான சிறிது நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதே.


Ramanujadasan
டிச 18, 2024 15:10

national human rights commission chairman நியமனம் விஷயமாக , அவர்கள் சந்தித்து கொண்டனர் . அதுவும் பப்பு நாடாளுமன்ற எதிர் கட்சி தலைவராக இருப்பதால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை