உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

புதுடில்லி; பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் 3ம் கட்ட ஓட்டுப்பதிவு அறிவித்தபடி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந் நிலையில் ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது; பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, அமைதி என உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை. இன்று ஓட்டு போடும் மக்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றிலிருந்து ஜம்மு காஷ்மீரை விலக்கி வைக்கும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
அக் 01, 2024 10:44

கடந்த பத்து வருடங்களாக பொய் ஜே பி ஆட்சி புரிந்தும் காஸ்மீரில் அமைதி திரும்பவில்லை, நீங்களும் உருப்படியாக ஒன்றும் செய்தபாடில்லை, தினமும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது, ஆனாலும் ஆலோசனைக்கு மட்டும் குறைச்சல் இல்லை, அரசாங்கம் எப்படி அமையனும் என்று அமித் ஷா சொல்கிறார், போயி முதலில் காஸ்மீர் அப்புறம் மணிப்பூர் என்று வேலையை பாருங்க, சும்மா டெல்லியில் உட்கார்ந்து நாற்காலியை தேய்க்காதீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை