உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!

தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!

பெங்களூரு: தர்மஸ்தலா கோவில் பற்றி அவதுாறு பரப்பி கூக்குரல் எழுப்பிய சர்வதேச ஊடகங்கள், அது பொய்யான தகவல் என்று தெரிந்தபிறகு அமைதியாகி விட்டன. சர்வதேச ஊடகங்களின் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான சதிச்செயல் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் அமைந்துள்ளது மஞ்சுநாதர் கோவில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். உலகம் முழுவதும் பிரபலமான இந்த கோவில் பற்றி அவதுாறு பரப்பும் வகையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oboacfys&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 20 ஆண்டுகளாக இங்கு பெண்கள் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக, கோவில் முன்னாள் ஊழியர் ஒருவர் கூறிய விவகாரம் தான் இப்படி பூதாகரமாக உருவெடுத்தது.இதை பயன்படுத்தி, கோவிலின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் சர்வதேச ஊடகங்கள் பல தொடர்ந்து செய்தி வெளியிட்டன.இவற்றில் முக்கியமானது, அல் ஜசீரா. இந்தியாவை பற்றி தொடர்ந்து அவதுாறாக செய்தி வெளியிடும் வழக்கம் கொண்ட இந்த ஊடகம், தர்மஸ்தலா கோவிலை பற்றி அப்பட்டமான பொய்கள் அடங்கிய செய்தியை வெளியிட்டது. இதேபோல, ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம், ஏபிசி (ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேசன்), டிடபிள்யூ (ஜெர்மனி நாட்டு ஊடகம்), கார்டியன் (பிரிட்டன்), பிபிசி (பிரிட்டன்), இன்டிபென்டன்ட் (பிரிட்டன்) ஆகிய நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.இவற்றின் நோக்கம், நடந்த சம்பவத்தை வெளியுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. புகழ்பெற்ற ஹிந்து கோவில் பற்றி அவதுாறு பரப்ப கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பது தான். 'இந்தியாவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாதா' என்று வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்த ஊடகப்புலிகளுக்கு அவல் கொடுத்தது போல, கோவிலின் முன்னாள் ஊழியர் புகார் கொடுத்தார்.அவர்களும், 'கிடைத்தது வேட்டை' என்று நீட்டி முழக்கி, வீடியோவும், பேட்டியுமாக வெளியிட்டு அவதுாறு பரப்பினர். ஆனால், அவர்கள் புளுகு ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. புகார் கொடுத்த கோவிலின் முன்னாள் ஊழியர், இப்போது பல்டி அடித்து விட்டார்.'தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் கூறியதன் பேரிலேயே, தான் புகார் கிளப்பியதாக' அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் மூலம், தர்மஸ்தலா கோவிலில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்ற பரப்பப்பட்ட தகவல்கள், அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகியுள்ளது. தங்கள் பொய் வெளிப்பட்டு விட்டதால் சர்வதேச ஊடகங்கள் அமைதியாகி விட்டனர்.ஊடகத்துறையில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல, செய்தி வெளியிட்டதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கும் என்ற கருத்து பலராலும் முன் வைக்கப்படுகிறது.பொருளாதாரத்திலும், சர்வதேச அரங்குகளிலும் இந்தியா முன்னிலைக்கு வந்து விட்டதை ஜீரணிக்க முடியாத மேற்கத்திய அமைப்புகள் பல, இந்த சதியின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. புகார் அளித்த கோவிலின் முன்னாள் ஊழியரின் பின்னணியில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இருப்பதாக வெளியான தகவல், இத்தகைய சந்தேகத்தை மேலும் பெரிதாக்குகிறது.கோவிலின் புகழை கெடுக்கவும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இந்திய புனிதத்தலங்களின் மரியாதையை உலகளவில் நாசம் செய்யவும் திட்டமிட்டு இந்த பொய்ப்புகார் அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சதித்திட்டத்தை ஆராயவும், பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், என்.ஐ.ஏ., அல்லது சிபிஐ மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

visu
ஆக 20, 2025 21:38

திராவிட மாடல் காரணமாக இருக்கலாம்


Rathna
ஆக 20, 2025 20:08

1. பங்களாதேஷ் அரசு மாற்றத்தில் அமெரிக்காவின் சதி. அதற்கு பங்களாதேஷ் ex பிரதமர் சொன்ன காரணம் இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்தில் ஒரு கிறிஸ்துவ நாட்டை உண்டாக்க அமெரிக்கா ப்ரெஷ்க்ஷர் கொடுத்தது என்பது. 2. அல்ஜசீரா இவற்றை பூதாகரமாக ஆக்குவதால், மேற்கு ஆசியா ஜிஹாதி நாடுகளின் கூட்டணி இதில் சம்பந்தப்பட்டு இருக்கும். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கோ அல்லது NGO களுக்கோ ஹவாலா பணம் வந்து இருக்கலாம். இந்தியாவில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை 2 -3% ஓட்டுகள் தீர்மானிப்பதால் இதை ஒரு மத மாற்ற காரணியாக பயன்படுத்த சில கட்சிகள் முயற்சி செய்து இருக்க கூடும். இதை ஜார்கன்ட், காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல், டெல்லி போன்ற மாநிலங்களில் பங்களாதேஷிகள் மூலமாக சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வெற்றி கண்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம். இதற்கு உதாரணம், IT மாநலத்தில் 25% தூய்மை பணியாளர்கள் பங்களாதேஷிகள்.


MUTHU
ஆக 20, 2025 19:17

அல்ஜஷீரா கத்தார் நாட்டின் அடிப்படைவாத டிவி என்பதால் சவூதி உள்ளிட்ட நிறைய நாடுகள் அதனை புறக்கணித்து தங்களுக்கென்று தனி டிவி உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். சோகம் என்னவென்றால் தனி சேனல் உருவாக்க இயலாத நாடுகள் இந்த சேனல் பார்த்து மூளைச்சலை செய்யப்பட்டுக்கொண்டுள்ளனர்.


AMMAN EARTH MOVERS
ஆக 20, 2025 18:30

உண்மையை சொன்னா சதி சூழ்ச்சி அப்படினு திசை திருப்பும் செயல் இது


என்றும் இந்தியன்
ஆக 20, 2025 17:57

தமிழகத்தை சேர்ந்த ஒரு கும்பல் கூறியதன் பேரிலேயே,தான் புகார் கிளப்பியதாக அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ள தகவல்???திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசா அது???


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 20, 2025 17:55

நாட்டில் பொது சிவில் கிரிமினல் சட்டம் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியா பெயரை பாரத தேசம் என மாற்ற வேண்டும். இந்து தேசம் என அறிவிக்க வேண்டும். அந்நிய கைக்கூலி யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.


அப்பாவி
ஆக 20, 2025 17:35

பொய் சொன்ன ஊழியரை ப்போட்டுத் தள்ளி தர்மஸ்தலாவின் தர்மத்தை நிலை நாட்டலாமே. இதே எதிர் பார்ட்டியிடம் பணம் வாங்கிட்டு பல்டி அடிச்சிருக்க மாட்டாருன்னு என்ன கேரண்ட்டி?


M L SRINIVASAN
ஆக 20, 2025 18:45

உங்களை வச்சு அடுத்தவரை எடை போடாதீர்கள்


N Sasikumar Yadhav
ஆக 20, 2025 16:45

அந்நிய பாலைவனமத கொத்தடிமைகள் உண்மை தெரிந்த பின் பதறுகிறானுங்க


Modisha
ஆக 20, 2025 16:36

தமிழகம் அனைத்து ஹிந்து விரோத சக்திகளின் வாழ்விடம் . போலி திராவிடர்கள் நம் சாபக்கேடு .


vbs manian
ஆக 20, 2025 15:45

நிஜம் வெளிவரவில்லை. பள்ளி கல்லூரி மாணவிகள் மாயம். பாதிக்க பட்டவர் நேர்காணல் உள்ளன. பதினைந்து இருபது ஆண்டுகளில் நிலப்பரப்பு மிகவும் மாறிவிட்டது. அடையாளம் காண்பது கஷ்டம். எலும்பு மண்டையோடு எல்லாம் மக்கி மண்ணோடு மண்ணாய் போயிருக்கும். உண்மையை கண்டுபிடிக்காமல் ஹிந்துக்கள் மீது தாக்குதல் என்று திசை திருப்பம். மஞ்சுநாதசாமி தீர்ப்பு சொல்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை