உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே கல்லில் 2 மாங்காய்; திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகனை வீழ்த்தினார் சந்திரபாபு!

ஒரே கல்லில் 2 மாங்காய்; திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகனை வீழ்த்தினார் சந்திரபாபு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக புகார் கிளப்பிய சந்திரபாபு நாயுடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தியுள்ளார்.உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் இங்கு விநியோகம் செய்யப்படும் பிரசாத லட்டு தவறாமல் வாங்கிச் செல்வர். நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் இங்கு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c0ab3kpk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் மத்தியில் இருக்கும் டிமாண்ட் காரணமாக, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதெல்லாம் கூட நடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிர வைக்கும் குற்றச்சாட்டை கிளப்பினார். பக்தர்கள் புனிதமானதாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ரெட்டி ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அவர் புகார் கிளப்பிய மறுநாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் திருப்பதி லட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 'முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர்; நாங்கள் அதை தரமானதாக மாற்றி நெய் மட்டுமே லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டோம் என்றார் சந்திரபாபு நாயுடு. இப்படி திடுக்கிடும் குற்றச்சாட்டு கிளம்பியதில், சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு பலன்கள் உள்ளன. பக்தர்கள் மத்தியில் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது; தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன், மீண்டும் ஆந்திர அரசியலில் தலையெடுக்க முடியாத வகையிலான சிக்கலை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மகன் கொந்தளிப்பு

சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர பிரதேச ஐ.டி., அமைச்சருமான நாரா லோகேஷ் கூறியதாவது: 'திருமலை கோவில் மிகவும் புனிதமானது. ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியது அவமானம். அவர்களின் அரசால் கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்' என்றார்

நடவடிக்கை உறுதி!

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: ஓய்.எஸ்.ஆர்.,கட்சி ஊழலில் ஈடுபட்டது எங்களுக்கு எப்போதும் தெரியும். ஆனால் அவர்கள் திருப்பதியில் இதைச் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெய்வம் புனிதமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது.இப்போது ஆய்வறிக்கை விலங்குகளின் கொழுப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆரம்பம் என்று எங்களுக்குத் தெரியும். மேலும் உண்மை சம்பவங்கள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும், ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் ஒய்.வி.சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' தெலுங்கு தேசம் கட்சி அரசியல் லாபத்திற்காக பொய் சொல்கிறது. கோவிலின் புனிதத்தையும், கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும் சேதப்படுத்தியவர் சந்திரபாபு நாயுடுதான். அவர் அரசியல் ஆதாயத்திற்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.ஐ., விசாரணை கோரும் காங்.,

இதற்கிடையில், காங்கிரசும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸின் மாநில தலைவரும் ஜெகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.ஹிந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் புனிதத்தை நாசம் செய்யும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் அரசியல் கோணங்கள் இல்லை. யார் பொறுப்பு என்று கண்டுபிடியுங்கள்' என்றார். இந்த விவகாரம் தான் இப்போது ஆந்திர அரசியலில் ஹாட் டாபிக்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Mahalingam Laxman
செப் 26, 2024 09:08

Better late than never is the proverb and golden advice which Sri Chandrababu Naidu adopted. But the method adopted is to be condemned by all means. Some persons praise him that by one stroke he killed two birds. Brought down image of Jagan and opposite cannot win next election. BUT HE COMMITTED BIG BLUNDER BY BRINGING DOWN THE IMAGE OF THIRUPATHY TEMPLE AND HINDUS. I WOULD APPRECIATE HIM HAD HE SPOKEN OR WRITTEN LETTER TO CHIEF EXCUTIVE TO VERIFY AND TAKE IMMEDIATE ACTION INSTEAD WASHING THE DIRTY LINEN IN THE PUBLIC. IF THEY HAVE NOT TAKEN ANY ACTION THEN HE SHOULD BRING IT TO PUBLIC. SO, HE COMMITTED UN PARDONABLE SIN WHICH VENKARESWARA HIMSELF WILL NOT EXCUSE. LAXMAN.


Suppan
செப் 25, 2024 16:32

ஜெகன் ஆட்சியின் பொழுது சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த விவரங்கள் கிடைத்து அதை வெளியிட்டிருந்தால் ஜெகன் எல்லா தடயங்களையும் அழித்திருப்பார் . பதவிக்கு வந்தபின் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கலாம் . தரமான நெய் ஒரு லிட்டர் சுமார் 600 ரூபாய் . மொத்தமாக வாங்கினால் சுமார் ஐநூறு ரூபாய் இருக்கலாம். 320 ரூபாய்க்கு விற்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? .


Narayanan
செப் 25, 2024 16:24

அதெல்லாம் இருக்கட்டும் ஜெகன்மோகன் எப்படி ஹிந்துக்கள் அல்லாதவரை திருப்பதி குழுவில் அமர்த்தினார் . அவர்கள் கிறித்தவ மதத்திற்கு சென்றவர்கள் . பெயரை மாற்றிக்கொள்ளவில்லை . என்ன ஒரு மொள்ளமாரித்தனம் . ஜெகன்மோகன் ரெட்டியும்கூட தன பெயருக்கு பின்னல் கிறித்துவ பெயரை போட்டுக்கொள்ளாமல் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்திருக்கிறார் . வேஷதாரிகளை அகற்றவேண்டும் அரசியலில் இருந்தும் .


சாண்டில்யன்
செப் 23, 2024 09:26

அட்லீஸ்ட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த லட்டின் தரத்தையும் சைஸையும் திரும்ப கொண்டு வந்தாரானால் சந்திரபாபுவை பாராட்டலாம் அதை விடுத்து பிஜேபி யின் வெறுப்பு / திசை திருப்பும் அரசியலுக்கான இன்னுமொரு கைப்பாவையானது சோகம்


சாண்டில்யன்
செப் 23, 2024 09:21

இதில் சந்தடி சாக்கில் தமிழ்நாட்டை இழிவுபடுத்தி பிஜேபி யை குஷிப்படுத்தியது மூன்றாவது மாங்காய்


satheesh kumar
செப் 22, 2024 21:54

இதை நாயுடு அரசியல் ஆக்க வேண்டும் என்றால் தேர்தல் நேரத்தில் கூறி இருப்பார் . இப்போது அவருக்கு சரியான தகவல் அல்லது ஆதாரம் கிடைத்திருக்கும் அதனால் கூறுகிறார், கிறிஸ்தவரான கருணாகர ரெட்டி என்பவரை திருப்பதி கோவில் பொறுப்பாளர் ஆக்கியது இதே ஜெகன் தான். அவர் ஒன்றும் உத்தமர் இல்லை. இவருடைய ஆட்சி காலத்தில் திருப்பதி கோவிலுக்குள்ளயே கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடந்தது.


Bahurudeen Ali Ahamed
செப் 23, 2024 13:08

நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது,


Mohan Mohan
செப் 22, 2024 14:48

Lets say you right. Then why naidu didnt bring it to light and took action for so many years before and why now. Has not he visited the temple before? I think he did visited temple for he is talking about Prasad. Politician can go to any height.


Bahurudeen Ali Ahamed
செப் 22, 2024 12:20

ஜெகனின் ஆட்சியில் இந்த கலப்படம் நடந்திருந்தால் அப்போதல்லவா இந்த குற்றசாட்டை ஜெகனின் மீது சாட்டியிருக்க வேண்டும் இப்பொழுது ஆட்சியமைத்து 3 மாதம் கழித்து வெளியிடவேண்டிய அவசியம் என்ன?, மேலும் ஒரு குற்றம் நடக்கும்போது யார் பொறுப்பு? யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்தானே அந்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர். கடந்த ஐந்து வருடமாக நடந்ததாக சொல்லப்படும் சதியை இப்போது வெளியிட்டு அரசியல் செய்யலாம் என்று காத்திருந்தாரோ, சந்திரபாபு நாயுடு உண்மையான பக்திமானாக இருந்தால், இந்த கலப்படத்தை பற்றி வெளியிட்டு பக்தர்களின் மனதை நோகடித்திருக்க மாட்டார், அதற்கு பதில் அந்த கலப்படத்திற்கான செயலில் ஈடுபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருப்பார், இந்த தவறு இனிநிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பார் . இவர் சரியான அரசியல்வாதி, அதனால்தான் மக்களின் கடவுள் நம்பிக்கையை தன் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த பார்க்கிறார், அவருக்கு ஜெகன் இனிமேல் தலையெடுக்க கூடாது அவ்வளவுதான் .


Manohar Vellaichamy
செப் 22, 2024 11:54

You are wrong, Now They are going to purchase Nandhini Milk co operative a Karnataka government. Jegan father planned to build churches in Holy Tirumala hills later his helicopter crashed in same hills and died. The same way This YSR Christian eventually will get punishment. Note - next all the election he will be defeated


Muthukumar Ganapathy
செப் 22, 2024 06:59

இது சந்திரபாபு நாயுடுவின் கபட நாடகம். தனது குடும்பத்தார் நடத்தும் ஹேரிட்டேஜ் பால் பொருட்களை TTD வாங்க ஒரு மறைமுக சந்தை ஏற்பாடு.... அவ்வளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை