உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்; நிவாரணம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவத்திற்கு தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2d0mhgpv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்புடன் வைகுண்ட ஏகாதசி தரிசனம் துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை வைகுண்ட துவாரம், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

மன்னித்துவிடுங்க!

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. இது குறித்து, திருப்பதி தேவஸ்தானம் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் கூறியதாவது: கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில குறைபாடுகள் உள்ளன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இழந்த உயிர்களை மீட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கை

திருப்பதி எம்.ஜி.எம்., கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணம்; இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ்வர் தெரிவித்தார். உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து உள்ளது.

நேரில் செல்கிறார் சந்திரபாபு

கூட்ட நெரிசலில் சிக்கி, காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை இன்று (ஜன.,09) முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

அப்பாவி
ஜன 09, 2025 16:24

வைகுண்ட ப்ராப்தியோடு 25 லட்சமும் கிடைக்குது.


Murugan
ஜன 09, 2025 12:55

கோவில் நிர்வாகமும் காவல் துறையும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததுதான் முக்கிய காரணம் என்பதை கூற இந்து மதவாத மீடியாக்களுக்கு, கார்போரேட்டு மீடியாக்களுக்கு நா கூசுகிறதா? வெட்கமாக இருக்கிறதா? இந்து மதவாதம் தங்கள் கைகளை கட்டிவிட்டதா


Murugan
ஜன 09, 2025 12:51

கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்து மதவாத கும்பல்


Mettai* Tamil
ஜன 09, 2025 14:04

அப்புறம் ஏன் பெரியார் .கருணாநிதி சிலைகளுக்கு வருஷ வருஷம் மாலை போட்டு மரியாதை செய்ரீங்க ..சிலைல அவங்க இருக்காங்களா ??


Murugan
ஜன 09, 2025 12:50

அங்கு செல்லாதது ஏன் ?


Murugan
ஜன 09, 2025 12:48

இதற்கு பாஜ கூட்டணி அரசே பொறுப்பு


Krishnamurthy Venkatesan
ஜன 09, 2025 12:40

எப்போது இலவசத்திற்காக மக்கள் அலைமோதுகிறார்களோ இதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதுதான். In 1999 சபரிமலை stampede, 2005 சென்னை stampede, 2019 துறையூர் stampede, 2008 ஜோத்பூர் stampede , 2024 hathras stampede, many people were killed and yet the government has not learnt anything from these incidents. Undisciplined individuals who never follow the queue tem and always looking for quick freebies are the main cause for these kind of incidents.


ram
ஜன 09, 2025 12:36

இதை வைத்து இங்கு இருக்கும் மார்க்க, அன்பு, திராவிட ஆட்கள் ஆரம்பித்து விடுவார்கள் அது இது என்று. இங்கு அண்ணா யூனிவர்சிட்டி கேசில் அந்த SIR யார் என்று சுடலினை கேட்க மாட்டார்கள். இங்கு இருக்கும் திராவிட அடிமை நியூஸ் channelgal இதை வைத்து கல்லா கட்டிவிடுவார்கள் வெட்கமே இல்லாமல்.


ram
ஜன 09, 2025 12:32

அங்கு வேலை செய்யும் அணைத்து கிரிப்டோஸ் ஆட்களையும் விசாரிக்க வேண்டும், இந்த ஆட்சியில் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்ப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம், இதில் அவர்கள் இருப்பதற்கு சாத்தியம் அதிகம். சந்திரபாபு நாயுடு அரசு இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரணை செய்து உரிய நபர்களை தண்டிக்க வேண்டும்.


Saran
ஜன 09, 2025 11:28

Don’t blame the administration. As a devotee our people never respect the queue, they always push and over take others to reach the destination before. They will be like that, no one can their habit.


AMLA ASOKAN
ஜன 09, 2025 11:18

இதற்கு கோவில் நிர்வாக கமிட்டியினர் அனைவரும் சவுக்கடி கொடுத்து கொள்ள வேண்டும்


Mettai* Tamil
ஜன 09, 2025 11:46

கண்டிப்பாக கோவில் நிர்வாக கமிட்டியினர் சவுக்கடி கொடுக்கத்தான் போறாங்க ....பாதுகாப்பு பணியில் உள்ள சில கயவர்களுக்கு ....


ram
ஜன 09, 2025 13:13

அப்ப அண்ணா யூனிவர்சிட்டி இன்சிடெண்ட்டுக்கு திருட்டு திமுக ஆட்கள் அனைவரும் சவுக்கு அடி கொடுத்து கொள்ள வேண்டும் /


சமீபத்திய செய்தி