உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்சலில் வந்த சடலம்: ஆந்திர பெண் அதிர்ச்சி

பார்சலில் வந்த சடலம்: ஆந்திர பெண் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கும் வகையில் பார்சலில் சடலம் ஒன்றை மர்ம நபர்கள் அனுப்பி வைத்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகா துளசி. இவர், வீடு கட்டி வருகிறார். இதற்காக சத்ரியா சேவா சமீதி அமைப்பிடம் உதவி கேட்டார். இதற்காக அவர்கள் பார்சலில் டைல்ஸ் அனுப்பி வைத்தனர். பிறகு கட்டுமானத்திற்கு இன்னும் உதவித்தேவைப்படுவதாக அந்த அமைப்பிடம் கூறினார். இதனையடுத்து மின்சாதன பொருட்களை பார்சலில் அனுப்பி வைப்பதாக அந்த அமைப்பினர் கூறியிருந்தனர். நேற்று இரவு மர்ம நபர் ஒருவர், நாகா துளசியை தொடர்பு கொண்டு, மின்சாதன பொருட்களை பார்சலில் கொண்டு வீட்டுவாசலில் வைத்துள்ளதாக கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து நாகா துளசி மற்றும் குடும்பத்தினர் வந்து பார்சலை திறந்து பார்த்த போது, அதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்தது. அதில் மிரட்டல் கடிதம் ஒன்று கிடந்தது. அதில் ரூ.1.3 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால், மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்சலை கொண்டு வந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் சத்ரியா சேவா சமீதி அமைப்பினரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kundalakesi
டிச 20, 2024 18:23

கட்டுக்கதை நம்பாதே


Barakat Ali
டிச 20, 2024 17:15

இறுதிநாள் நெருங்கிவிட்டது ...........


அப்பாவி
டிச 20, 2024 16:58

யாரங்கே... நம்ம அண்ணாச்சியை ஆந்திராவுக்கு அனுப்பி பேசச் சொல்லுங்க.


Anantharaman Srinivasan
டிச 20, 2024 19:45

அண்ணாச்சினா யாரு


பல்லவி
டிச 20, 2024 16:54

எல்லா மாநிலத்திலும் ஒரே மாதிரியான குற்றங்கள்


என்றும் இந்தியன்
டிச 20, 2024 16:37

ரூ 1.3 கோடி ஏன் ரூ 100 கோடி கேட்டிருக்கவேண்டியது தானே. அவர் கட்டும் வீட்டிற்கு அவரே இலவசம் வாங்கும் போது???அவரிடம் ரூ 1.3 கோடி கேட்டது வேடிக்கையிலும் வேடிக்கை. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி மற்றும் வங்கி மூலம் ஜி பே......மூலம் இது வரை ரூ 2715 கோடி fraud இதில் கொள்ளையடித்த கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலமாக செய்தவர்களுக்கு மாதச்சம்பளம்னு ஒரு ஓகை கிடைக்கும் மீதி அத்தனையும் Terrorist கும்பலுக்கு செல்கின்றது இதற்குத்தான் இவர்கள் IT படித்தார்கள்???அப்படித்தானே


சமீபத்திய செய்தி