உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அமித்ஷா உடன் அண்ணாமலை சந்திப்பு

டில்லியில் அமித்ஷா உடன் அண்ணாமலை சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக உடன் பாஜ கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணியில் வேறு கட்சிகளையும் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்று மத்திய உள்துதுறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.இந்நிலையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும் டில்லி சென்று அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜ தலைவர் நட்டா மற்றும் பிஎல் சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை