உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா -- மியான்மர் எல்லையில் மேலும் 80 கி.மீ.,க்கு தடுப்பு வேலி

இந்தியா -- மியான்மர் எல்லையில் மேலும் 80 கி.மீ.,க்கு தடுப்பு வேலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி :இந்தியா -- மியான்மர் எல்லையில் ஏற்கனவே 10 கி.மீ., துாரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்க உள்ளதாக, பி.ஆர்.ஓ., எனப்படும், எல்லை சாலை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகின்றனர்.நம் நாட்டின் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் மியான்மருடன் 1,643 கி.மீ., எல்லையை பகிர்கின்றன. சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா - -மியான்மர் எல்லையில், இந்தியா- - வங்கதேச எல்லையைப் போன்று முள்கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பணி, எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிப்பூரின் மோரே பகுதியில் 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பெரும்பாலான எல்லை பகுதிகளில் இதுபோன்ற தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன. இது குறித்து எல்லை சாலைகள் அமைப்பின், கிழக்கு பிரிவின் கூடுதல் இயக்குனர் பி.கே.எச். சிங் கூறியதாவது: உள்துறை அமைச்சகம் எல்லை பகுதியில், 1,700 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் கண்டுள்ளது. மணிப்பூரின் மோரே எல்லையில் 10 கி.மீ., துாரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் அடுத்த 80 கி.மீ., எல்லை கண்டறியப்பட்டு விரிவான திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 26, 2024 00:35

வேலி அமைத்தாலும், இந்திய ராணுவம் அந்த வேலி அமைத்த பகுதியில், அமையாத பகுதியில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.


Kasimani Baskaran
ஜன 25, 2024 22:08

சீன இராணுவ ஆதரவில்த்தான் மியான்மார் இராணுவம் ஜனநாயகம் மூலம் ஆள்பவர்களை தூக்கி சிறையில் வைத்து விட்டு ஆட்சியை நடத்துகிறது. ஆயுதமேந்திய குழுவினர் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டபடியால் இராணுவம் சிக்கலில் இருக்கிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ