வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கரெக்ட் , இப்போ யாருக்கும் எங்கே இருக்கோம்னு தெரிய மாட்டேங்குது , சில பேர் பாகிஸ்தானிக்காரன் மாதிரியே பேசுறான் , பல பேர் டாஸ்மாக் போனா , ராக்கெட்ல போற மாதரியே இருக்காம் ,
இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்
புதுடில்லி: செயற்கைக்கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போன் மூலம் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ மெகா திட்டமிட்டுள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில் முன் எப்போதும் இல்லாத புதிய பாய்ச்சல்களை இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ சிறப்பாக செய்தது. இதனால் இஸ்ரோவுக்கு மக்கள் மத்தியில் புகழ் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில், 7 செயற்கைக் கோள்களை ஏவி, பொதுமக்களின் மொபைல் போனுக்கு நேவிகேஷன் எனப்படும் வழிகாட்டுதல் சேவை வழங்க இஸ்ரோ மெகா திட்டமிட்டுள்ளது.இது குறித்து விண்வெளித்துறையின் 'இன்ஸ்பேஸ்' தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது: எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பற்றிய தகவல் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், நேவிகேஷன் அமைப்பை உருவாக்க இஸ்ரோ பணியாற்றி வருகிறது. நாங்கள் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்த உள்ளோம். உலக அளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதில் பெரும் பங்கை கைப்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும். விண்வெளித்துறையில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதோடு திறமைசாலிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே விண்வெளித்துறையில் முழுநேரப் பட்டப்படிப்பைகொண்டுவர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இன்ஸ்பேஸ் மையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கரெக்ட் , இப்போ யாருக்கும் எங்கே இருக்கோம்னு தெரிய மாட்டேங்குது , சில பேர் பாகிஸ்தானிக்காரன் மாதிரியே பேசுறான் , பல பேர் டாஸ்மாக் போனா , ராக்கெட்ல போற மாதரியே இருக்காம் ,
இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்