உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

பாபா சித்திக் கொலை போல மற்றொரு சம்பவம்; ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தைப் போலவே மேற்கு வங்கத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அரசியல் பிரமுகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோல்கட்டா மாநகராட்சியின் 108வது வார்டு திரிணமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருப்பவர் சுஷந்தா கோஷ். இவர் தனது வீட்டின் முன்பக்கம் அமர்ந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேரில் ஒருவன், திடீரென இறங்கி வந்து, துப்பாக்கியால் சுஷாந்தா கோஷை சுட முயன்றான். ஆனால், துப்பாக்கி திடீரென கோளாறு ஆனதால், புல்லட் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த இளைஞரை சுஷாந்தா கோஷ் மடக்கி பிடித்து, தாக்கினார். உடனே, அங்கு பொதுமக்கள் கூடினர். தன்னை கொல்ல யார் அனுப்பி வைத்தது என்று கேட்டு அந்த நபரை தொடர்ந்து தாக்கினார். இதையடுத்து, அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Perumal Pillai
நவ 16, 2024 19:45

TMC


S.Martin Manoj
நவ 16, 2024 19:21

மணிப்பூர் மாநிலத்தில் பாலும் தேனும் ஓடுதா?


nagendhiran
நவ 16, 2024 19:33

ஏன் மணீப்பூரும்? உத்திரபிரதேசமும்தான் தெரியுமா?


Ganesh
நவ 16, 2024 16:44

சார்... இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லேம் என்கவுண்டர் தான் பெஸ்ட்... அப்போனதான் அடுத்து எவனும் துப்பாக்கி தூக்க மாட்டான்....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 15:46

மற்ற மாநிலங்களைப் போல, குறிப்பாக தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் மாபியாக்கள், அவர்களிடையே போட்டிகள் உண்டு .......


வைகுண்டேஸ்வரன்
நவ 16, 2024 17:42

யோவ் ரத்தினம், மனநல டாக்டர் யாரையாவது பாருமய்யா எதுக்கெடுத்தாலும் பிறந்த நாட்டை குறை சொல்லியே எழுதும் மனநிலைக்கு சிகிச்சை இருக்கா ன்னு பாரும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 17:58

வேஸ்ட் புகழ் ..... டாயி திருடா ன்னா உடனே எஸ் சார் ன்னு வந்துட்டியே .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை