உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு

சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சுப்ரீம்கோர்ட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களை நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. தற்போது சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்துகள், அது பற்றிய விவரங்கள் இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை தெரிவித்துள்ளார். அனைத்து சொத்து மதிப்பு விவரங்களும் சுப்ரீம்கோர்ட் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.இந்த சொத்துகளில் நீதிபதிகளின் சொத்துகள், அவர்களது வாழ்க்கை துணையின் சொத்து மதிப்புகள், குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், தங்கம், பங்குச்சந்தைகளில் முதலீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; ஏப்.1, 2025 அன்று நீதிமன்றத்தின் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. எஞ்சிய நீதிபதிகளின் சொத்து விவரங்களும் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vns
ஜூன் 09, 2025 14:55

இந்திய மக்களை எப்படியெல்லாம் முட்டாள்கள் ஆக்குகிறார்கள் பாருங்கள். இவர்கள் சொத்து விவரத்தை வெளியிட்டால் நாம் இந்த நீதிபதிகளை நம்ப வேண்டுமாம். இவர்களும் பேனாமி பெயர்களில் சொத்து வாங்கியிருந்தால் யாருக்கும் தெரிய வராது.அப்புறம் இவர்களை யாரும் கைது செய்ய முடியாது. நீதிபதி வெர்மாவிற்கு அதிக பட்ச தண்டனை நீதிபதி பதவி நீக்கம் அவ்வளவுதான். யாரும் கைது செய்ய மாட்டார்கள். நேர்மையற்ற நீதிபதிகள் மிகப்பலர், கேவலமான நீதிபதிகள்.


என்றும் இந்தியன்
மே 06, 2025 17:45

ஒரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜின் வருட ஐடி செலுத்தம் எவ்வளவு அவருடைய மாத சம்பளம் எவ்வளவு பாருங்கள் Year IT paid, Rs. Lakhs 2010-11 30.69 2011-12 56.09 2012-13 119.34 2013-14 178.74 2014-15 123.74 2015-16 320.08 2016-17 422.47 2017-18 613.55 2018-19 585.94 2019-20 810.41 2020-21 1309.01 2021-22 1221.92 2022-23 936.44 2023-24 1748.53 2024-25 670.72 Chief Justice of the Supreme Court receives a monthly salary of ₹2,80,000, while other Supreme Court judges receive ₹2,50,000 per month. கிடைப்பது ரூ 30 லட்சம் வருடத்திற்கு சம்பளம் என்றாலும் வருமான வரி கட்டியது ரூ 17 கோடியா????????


Sridhar
மே 06, 2025 16:42

சொத்து விவரங்களை வெளியிடறதுக்கு எவ்வளவு தயக்கம் பாருங்க. இந்த ஒரு விவரத்தை மட்டும் வச்சிட்டு நம்ம ஒன்னும் பண்ணமுடியாது. அவுங்க ஒவ்வொரு வருசமும் வெளியிட்டாதான் உயர்ந்திருக்கா எவ்வளவு என்று நாம் புரிந்துகொள்ளமுடியும். அப்போகூட அந்த உயர்வு தாழ்வுகளுக்கு கரணம் என்னனு சொன்னாதான் விவரம் பூர்த்தியடையும். முதல்ல கொடுக்கறதுக்கே இவ்வளவு தயங்கறானுங்களே, பிற்பாடு கொடுப்பானுங்களா, இல்ல நம்மதான் ஞாபகம் வச்சுக்கிட்டு கேப்போமா? நாணயமான ஆட்கள் பொறுப்பில் இல்லாதவரை இவ்விசயங்கள் சும்மா பேச்சளவில்தான் இருக்கும்.


Rengaraj
மே 06, 2025 13:20

இங்கு வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்றால் உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருப்பவர்கள் மட்டுமல்ல, அனைத்து மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், கீழ்கோர்ட் நீதிபதிகள், மக்கள் வரிப்பணத்தில் பென்ஷனாக, சம்பளமாக, அலவன்சாக, பீஸாக, கட்டணமாக, எந்தெந்த உயர் அதிகாரிகள் பெறுகிறார்களோ அவர்கள் சம்பந்தப்பட்ட சொத்து கணக்கையும் இணையத்தில் சகலரும் பார்க்கும் வண்ணம் வெளியிடப் படவேண்டும். இவர்களை தவிர, மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின் கீழ் வரும் லோக்கல் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள், ராஜ்யசபா உட்பட அனைவரது சொத்துக்கணக்கும் வருடாவருடம் இணையத்தில் வெளியிடப்படவேண்டும். ஒவ்வொரு வருடமும் எப்படி நாம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறோமோ அதேபோன்று இந்த தகவலையும் சம்பந்தப்பட்டவர்கள் பதிவேற்றுவதற்கு ஒரு தேதியை அரசு நிர்ணயம் செய்து கட்டாயப்படுத்த வேண்டும். தேர்தல் சமயத்தில் மட்டும் சொத்துக்கணக்கை காண்பித்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள். ஒரேநேரத்தில் நாட்டில் உள்ள பல்வேறு வேட்பாளர்களின் சொத்துக்கணக்கை ஒரு வாக்காளரால் பார்க்கமுடியாது. எனவே அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. எனவே அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் ஏற்கெனெவே போட்டியிட்டிருந்து தற்போது போட்டியிடாவிட்டாலும் அவர்களது சொத்துக்கணைக்கையும் வருடாவருடம் வெளியிட வேண்டும். மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் இதற்கான மாறுதல்களை அரசு மேற்கொள்ளவேண்டும்.


Anbuselvan
மே 06, 2025 12:47

மீது 12 நீதிபதிகளின் சொத்து விவரம் இந்த மாதம் 15 தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவு போட உச்ச நீதி மன்றத்திற்கு மனசு வருமா? இல்லை ஜனாதிபதிக்கு மற்றும் கவர்னர் க்கு மட்டும்தான் நாங்கள் காலக்கெடு விதைப்போம் என கூறுமா


கல்யாணராமன்
மே 06, 2025 11:45

ரொக்கம் ரூ 500 கட்டுகள் எவ்வளவு உள்ளது என்றும் வெளியிடட்டும்.


swega
மே 06, 2025 11:29

கையூட்டு மூலம் சொத்து சேர்ப்பவர்களாக இருப்பின் சொத்துகள் அவர்கள் பெயரில் இருக்காதே.


ديفيد رافائيل
மே 06, 2025 11:24

நேர்மையான முறையில் பணம் சம்பாதித்து சொத்து சேர்த்தவர்கள் மட்டுமே சொத்து மற்றும் வருமான விவரத்தை வெளியிடுவார்கள்.


தத்வமசி
மே 06, 2025 11:11

இதில் கட்டுக்கட்டாக வீட்டிலோ, வேறு இடத்திலோ வைத்திருக்கும் கணக்கும் வருமா ?


Anbuselvan
மே 06, 2025 12:40

வந்தால் அது எப்படி வந்தது என கூற வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் பிடிபட்டால் நிச்சயமாக நேர்வழியில் வந்தது அல்ல என்பது இந்த அறிக்கை மூலம் ஊர்ஜிதம் ஆகி விடும். அப்புறம் களி எல்லாம் இவர்களுக்கு கிடையாது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றல் அவ்வுளவுதான். நம் நாட்டின் நீதித்துறை வாழ்க


Anbuselvan
மே 06, 2025 11:04

நாட்டின் ஜனாதிபதிக்கே காலக்கெடு கொடுத்து உத்தரவு போடும் உச்சநீதிமன்றம் இதற்கும் ஒரு காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை