உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல்

மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழிகளுக்கு அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு காங்., தலைமையில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சியின் போது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. பின் 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.இந்நிலையில் இன்று( அக்.,03) பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது . ஏற்கனவே ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன. தற்போது 5 மொழிகள் என செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
அக் 04, 2024 08:08

செம்மொழியாகாமல் ஏதாவது பாக்கி இருக்கா?


Ms Mahadevan Mahadevan
அக் 04, 2024 06:19

செம்மொழி அப்பிடினா என்னங்க அண்ணா? அதனால் ஏற்படும் மாற்றங்கள் எண்ணங்கண்ணா? நடைபாதை விகிராங்களா அந்த புத்தகம்


தமிழ்நாட்டுபற்றாளன்
அக் 04, 2024 02:49

மராத்தி தேர்தல் கணக்கு இது ,


Shekar
அக் 04, 2024 10:48

தமிழை செம்மொழி ஆக்கினேன்னு, நாம ஊரை ஏமாத்தலையா? அவனவனுக்கு அவனவன் மொழி செம்மொழிதான்.


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 23:34

மொழியை வைத்து வயிறு கழுபவர்களுக்கு ஆப்படித்துவிட்டார் . தமிழை வைத்து ரொம்பகாலமாக அரசியல் வியாபாரம் செய்த கட்சி தான் திமுக. அதன் தமிழ் ஆர்வலர்களின் ஓட்டுக்களை முதல் ஆப்பாக சீமானை வைத்து அமித் ஷா முதலில் பிரித்தார். ரெண்டாவது ஆப்பு அனைத்து அங்கீகார மொழியும் செம்மொழிதான். மொழி அரசியல் செய்பவன் இனி கோமாளி தான்.


Oviya Vijay
அக் 03, 2024 23:02

தேசிய மொழி அப்படின்னு உங்காளுங்க பொய் சொல்லிக்கிட்டு திரியுற ஹிந்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கலைங்களா எஜமான்?


Ram pollachi
அக் 03, 2024 22:36

ரூபாய் நோட்டில் உள்ள பதினைந்து மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்துட்டா போச்சு!


Karthi Natraj
அக் 03, 2024 22:04

அடுத்து 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும் செம்மொழி பிறகு 700 எழுத்து உள்ள மொழிகளும் செம்மொழி


ஆரூர் ரங்
அக் 03, 2024 21:54

நாட்டில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் சமமான மரியாதைக்காக செம்மொழி அந்தஸ்து கொடுத்து விடுங்கள். பின்னர் அதனை வைத்து அரசியல் வியாபாரம் எடுபடாது.


ஆரூர் ரங்
அக் 03, 2024 21:53

ஆனா குடும்ப கார்பரேட் கும்பலைத் தவிர வேறு யாரும் செம்மறி மாநாடு நடத்தி ஏமாற்றவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை