உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில், கொலைக்குற்றவாளிகளை போலீசார் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கைது செய்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற அளவுக்கு மாறிவிட்டது. தினமும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் வந்துள்ளது. இதனை பயன்படுத்தி நெட்டிசன்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர். பலர் நல்லதுக்கு பயன்படுத்தினாலும், சிலர் கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், டில்லி போலீசார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொலைக்குற்றவாளிகளை கைது செய்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.டில்லியின் கீதா காலனி மேம்பாலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சோதனை செய்தனர். அதில் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறந்த நிலையில் அவரது புகைப்படத்தை நகரின் பல இடங்களில் ஒட்டினர். 30 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், இறந்தவர் பற்றிய ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை.இதனையடுத்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இறந்தவர் புகைப்படத்தில் சில மாற்றங்களை செய்தனர். அந்த நபர் கண்களை திறந்து இருப்பது போலவும், லேசாக சிரிப்பது போலவும் மாற்றினர். மேலும் இறந்த நிலையில் முகம் சுருங்கி கிடந்த நிலையில் அதிலும் மாற்றம் செய்தும், பின்னால் வாகனங்கள் நிற்பது போலவும் சித்தரித்து புகைப்படம் எடுத்து மீண்டும் நகரின் பல இடங்களில் ஒட்டினர்.இதற்கு பலன் கிடைத்தது. இந்த படத்தை பார்த்து, இறந்தவரின் குடும்பத்தினர் போலீசை தொடர்பு கொண்டனர். அதில், இறந்தவர் ஹிதேந்தர்(35) எனவும், ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி உறவினர்களிடம் 9ம் தேதி தான் கணவர் காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஹிதேந்தர் கடைசியாக ஜேம்ஸ்(32), ராக்கி (35) மற்றும் பிரியங்கா(27) ஆகியோருடன் இருந்தது தெரிந்தது. 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், ஹிதேந்தருடன் பணப்பிரச்னை காரணமாக 3 பேருக்கும் முன்விரோதம் இருந்ததும், அவர்கள் ஹிதேந்தருக்கு மதுபானம் கொடுத்து, பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

g.s,rajan
ஜன 26, 2024 07:33

தமிழ்நாட்டில் தி.முக அமைச்சர் கே,என் நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு பற்றிய துப்பு பல ஆண்டுகளாக இன்னும் கிடைக்கவில்லை ,ஏ ஐ ,தொழில்நுட்பம் குற்றவாளிகைக் கண்டுபிடிக்க நிச்சயம் உதவுமா ...???


Dharmavaan
ஜன 26, 2024 08:17

வேங்கைவாசல் நீரில் மலக்கலப்பையும் ஏப்போதொ கண்டுபிடித்திருக்கலாம்


விடியல்
ஜன 25, 2024 23:11

சூப்பர் டெல்லி போலீசார்க்கு ஒரு சல்யூட்


தமிழ் மைந்தன்
ஜன 25, 2024 22:07

எந்த பிரியங்கா?


hariharan
ஜன 25, 2024 20:33

இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரூரர் அசோக்குமார் எங்கு இருக்கிறர் என கண்டுபிடிக்க முடியாதா?


S.kausalya
ஜன 25, 2024 20:04

Super


Varadarajan Nagarajan
ஜன 25, 2024 18:53

வாவ். இதுதான் வளர்ந்த தொழில் நுட்பத்தின் உதவி. ஆக்கபூர்வமாக உபயோகித்தால் மனிதகுலத்திற்கு எவ்வளவு நல்லது. ஆனால் ஹக்கேர் எனப்படும் கும்பல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தினம் தினமும் எத்தனை ஏமாற்றுவேலைகளை செய்கின்றது? எத்தனைபேர் ஏமாற்றப்படுகின்றனர்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை