வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவன் சகவாசமே பிஜேபிக்கு வேண்டாம்.
இன்னொரு பைத்தியக்காரர்
புதுடில்லி: “நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யாரும் ஏன் கைது செய்யப்படவில்லை?”என, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் டில்லி மாநகராட்சி கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. மிரட்டல் அப்போது, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய தாவது: பா.ஜ.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே ரகசியத் தொடர்பு உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவரும் ஏன் கைது செய்யப்படவில்லை? எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்ட அம லாக்கத்துறையை மத்திய பா.ஜ., அரசு பயன்படுத்தி வருகிறது. நம் கட்சியின் டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தாங்கள் கூறும்படி வாக்குமூலம் அளிக்கும்படி பரத்வாஜூக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், அவர் இணங்கவில்லை. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் நான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே, தன்னிடமும் வருவர் என பரத்வாஜ் எதிர்பார்த்துதான் இருந்தார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க மனதளவில் தயாராக இருப்பதாகவே அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் பரத்வாஜ் கூறியுள்ளார். மேலும், என்னை கைது செய்ய விரும்பினால், இப்போதே அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூட பரத்வாஜ் கூறியும், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர். ராபர்ட் வாத்ரா மத்திய அரசுடன் சமரசமாக செல்ல சிலர் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், மக்கள் பணியில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. மக்கள் முட்டாள்கள் அல்ல. உத்தர பிரதேசத்தில் மாயாவதி சமரசமாக சென்று விட்டதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல, ஓவைசியையும் கூறுகின்றனர். பெரும்பாலான மக்கள் இப்போது, காங்கிரஸ் கட்சியும் மத்திய பா.ஜ., அரசுடன் சமரசம் செய்து கொண்டதாக சொல்கின்றனர். ஆம் ஆத்மியின் ஐந்து தலைவர்களை சிறைக்கு அனுப்பிய மத்திய பா.ஜ., அரசு, நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் கைது செய்யாதது ஏன்? என மக்கள் கேட்கின்றனர். அந்த வழக்கில் கடும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சிறைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில், பொய் வழக்குகளில் ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், ஹரியானா மாநிலத்தில் நடந்த நில மோசடி குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், பிரியங்கா வின் கணவர் ராபர்ட் வாத்ரா பெயர் அதில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால், அந்த வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரசும் பா.ஜ.,வும் ரகசியக் கூட்டணி அமைத்துள்ளன என்பதை மக்கள் அறிவர். மக்கள் பணி நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வந்தோம். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யலாம். ஆனால், பதவிக்காகவோ கட்சிக்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்துக்காக சமரசம் செய்து கொள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் தயாராக இல்லை. மத்திய அரசைப் போலவே, டில்லியை ஆளும் பா.ஜ., அரசு, தேசிய தலைநகர் பிராந்தியத்தை நாசமாக்கி விட்டது. ஆம் ஆத்மி அரசை இழந்து விட்டோமே என மக்கள் வேதனைப் படுகின்றனர். இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்தினாலும், 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும். ஆம் ஆத்மி ஆட்சிக் காலத் தில் மின்வெட்டு இல்லை. ஆனால் இப்போது, பகலில் மட்டும் ஐந்து முறை மின்சார தடை ஏற்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. குடிசைகளை இடித்து, ஏழைகளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டனர். மேலும், ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய இலவச மின்சாரத்தை நிறுத்தவும், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு திட்டமிட்டு உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,கள் மற்றும் கவுன்சிலர்கள் எப்போதும் போல மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தேர்தலில் மக்கள் மீண்டும் நம்மிடம் அரசை ஒப்படைப்பர். இவ்வாறு அவர் பேசினார்.
இவன் சகவாசமே பிஜேபிக்கு வேண்டாம்.
இன்னொரு பைத்தியக்காரர்