உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ராகுல்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் ராகுல்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், சுமார் 24 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதுவரை 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இன்று(ஜூலை 08) அசாம் மாநிலத்திற்கு சென்ற ராகுல், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தார். அப்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா? என மக்களிடம் ராகுல் கேட்டறிந்தார்.

அதீத பேரழிவு

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில்,'' நான் அசாம் மக்களுடன் நிற்கிறேன். பார்லிமென்டில் நான் அவர்களின் சிப்பாய். அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதீத பேரழிவு மன வேதனையை ஏற்படுத்துகிறது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் பயணம்

ஓராண்டிற்கும் மேலாக வன்முறை நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று(ஜூலை 08) ராகுல் சென்றார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று, மக்களை ராகுல் சந்தித்தார். கடந்தாண்டு மே 3ம் தேதி முதல் மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் சென்றுள்ள ராகுல் அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கவர்னரை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rpalnivelu
ஜூலை 09, 2024 02:54

இவனொரு விஷக் கிருமி. இவனால் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்த பிரயோஜனமில்லா


naranam
ஜூலை 09, 2024 01:00

மணிப்பூரில் கலவரத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியே. இப்போது அதை மூடி மறைக்க பார்க்கிறார் ராகுல்.


ram
ஜூலை 08, 2024 17:26

குழந்தையையும் கிள்ளி விடுவது தொட்டிலியையும் ஆட்டுவது ராகுலுக்கு கைவந்த காலை நாட்டில் நடக்கும் எல்லாவிதமான போராட்டத்துக்கும் இவரும் இவர் கட்சியும் முக்கிய காரணம்


M Ramachandran
ஜூலை 08, 2024 16:11

அங்கு சென்று என்ன உருட்ட போகிறார். இது வரியா உருட்டி மக்களுக்கு ஏன்னா செய்தார்


Narayanan
ஜூலை 08, 2024 16:06

என்னமோ இப்போதுதான் அஸ்ஸாமில் வெள்ளம் வருவதுபோலவும் நேற்று பதவிக்கு வந்த பிஜேபி அரசே காரணம் என்கிறாரோ ? ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் . இதைதவிர்க்க நாட்டில் உள்ள எல்லா ஆறுகளையும் இணைக்க வேண்டும் .


SEETHARAMAN
ஜூலை 08, 2024 15:18

சாராயம் குடித்தும், மழை வெள்ளத்தில் செத்தவனுக்கும் வித்தியாசம் தெரியலையா


N Srinivasan
ஜூலை 08, 2024 12:53

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி வாங்க இங்கேயும் உயிர் சேதம் ரொம்ப இருக்கு


Ramanujadasan
ஜூலை 08, 2024 11:58

மரணம் நடக்கும் முன்னே , ராகுல் வருவார் பின்னே பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்


Ramanujadasan
ஜூலை 08, 2024 11:56

அய்யா ராஹுலு எப்போ அய்யா எங்க தமிழக்த்திற்கு வந்து கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவுகளுக்கு ஆறுதல் சொல்ல போறீக . பிஜேபி ஆளும் மாநிலம் மட்டும் தான் உங்க கண்களுக்கு தெரியுமாக ?


Ramanujadasan
ஜூலை 08, 2024 11:45

எங்கெங்கே சாவு நடக்கிறதோ அங்கே செல்கிறார் . அது பிஜேபி ஆளும் மாநிலமாக இருந்தால் மட்டுமே . தன் கட்சி அல்லது கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு செல்வதில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ