மேலும் செய்திகள்
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
2 hour(s) ago
பெங்களூரு : மலேசியா, வளைகுடா நாடுகளில் இருந்து நான்கு தனித்தனி விமானங்களில் வந்த ஒரு பெண் உட்பட நான்கு பயணியரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பல்வேறு நாடுகளில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று முன்தினம் கோலாம்பூரில் இருந்து வந்த 'ஏகே 053 ஏர் ஏசியா' விமானத்தில் வந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 12 லட்சத்து, 55 ஆயிரத்து, 655 ரூபாய் மதிப்புள்ள 197.43 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.* குவைத்தில் இருந்து 'ஜே9 - 431 ஏர் அரேபியா விமானத்தில்' வந்த பெண் பயணி, தனது ஆடையில் மறைத்துக் கொண்டு வந்த 12 லட்சத்து, 51 ஆயிரத்து, 203 ரூபாய் மதிப்புள்ள 196.73 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.* மதினாவில் இருந்து 'ஜி9 - 496' ஏர் அரேபியா விமானம் மற்றும் பக்ரைனில் இருந்து 'ஜிஎப் 282 கல்ப் ஏர்' விமானத்தில் வந்த இரு பயணியர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து, 74 லட்சத்து, 64 ஆயிரத்து, 986 ரூபாய் மதிப்புள்ள 1.167 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
2 hour(s) ago