உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: உதவாமல் படம் பிடித்த கொடுமை

நடுரோட்டில் பெண் மீது தாக்குதல்: உதவாமல் படம் பிடித்த கொடுமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால் : ம.பி.,யில் பெண் ஒருவரை குச்சியால் நபர் ஒருவர் தாக்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கண்டுகொள்ளாமல் அதனை படம் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.இந்த வீடியோ ம.பி., மாநிலம் தார் மாவட்டத்தின் தண்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நடத்தியது நிர்ஷிங் என்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் யார் என்று தெரியவில்லை.இந்த பெண்ணை நிர்ஷிங், நடுரோட்டில் குச்சியால் கடுமையாக தாக்கினார். அந்த பெண்ணை சிலர் பிடித்து கொண்டனர். பிறகு அவர்களும் தாக்கினர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல், மொபைல் போனில் படம் பிடித்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக து வங்கியதும், பேலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து நிர்ஷிங்கை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Palanisamy Sekar
ஜூன் 22, 2024 16:25

ரீலிஸ் எடுக்க ஆணுக்கு பெண் வேஷம் போட்டு நடித்த காட்சி அது என்று கேஸை முடித்துவிடுங்கள் . சர்வாதிகாரி இப்படித்தான் கையாள்வார்.


பிச்சைபாபு
ஜூன் 22, 2024 15:31

சூப்பர் ஆட்சி நடக்குது. சவுகான் ஜிந்தாபாத்.


தீரன்
ஜூன் 22, 2024 15:30

உதவினா ரெண்டு அடிவிழும். போலீஸ் புடிச்சிக்கிட்டு போய் விசாரிப்புன்னு டார்ச்சர் குடுக்கும்.


babu
ஜூன் 22, 2024 14:21

புதுசா நடக்குற மாதிரியே செய்தி போடுறீங்க


Kasimani Baskaran
ஜூன் 22, 2024 14:13

உருட்டுக்கட்டையால் தாக்குவதை குச்சி என்று சொல்வது பொய். பேராண்மை என்பது இதுதான்.


கிருஷ்ணதாஸ்
ஜூன் 22, 2024 17:04

மிகச் சரி!


Indian
ஜூன் 22, 2024 14:00

நாட்டோட நிலைமை இப்போ அப்படி தான் இருக்கு


R S BALA
ஜூன் 22, 2024 13:27

அவன் ஏன் படம்பிடிக்கிறான்.. எல்லாம் லைக்கு ஷேர் வருமானம்..


Senthoora
ஜூன் 22, 2024 13:40

அதே நிலை அவங்களுக்கு ஒருநாள் வரும்,


Krishnan Periyasamy
ஜூன் 22, 2024 20:19

அவர்கள் அந்த பெண்ணுக்கு உதவபோனால் அவர்களுக்கும் அடி விழும் அதற்கு சாட்சி இல்லாமல் போயிருக்கும் ஆனால் படம் எடுத்து போட்டதால் போலீஸ் கண்ணீல் பட்டு இப்பொது நடவடிக்கை எடுக்க உதவியது


மேலும் செய்திகள்