உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி மீது ஹனிடிராப் புகார் அளித்த ஏட்டு

மாணவி மீது ஹனிடிராப் புகார் அளித்த ஏட்டு

கதக்: கல்லுாரி மாணவி மீது போலீஸ் ஏட்டு, ஹனிடிராப் புகார் செய்து உள்ளார்.கதக் நரேகல் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். கல்லுாரியில் படிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நரேகல் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சச்சின், ஏட்டு சங்கர் மீது, கதக் எஸ்.பி., நேமகவுடாவிடம், கல்லுாரி மாணவி புகார் செய்தார். அந்த புகாரில் என் 'வாட்ஸாப்' புக்கு இருவரும், ஆபாச செய்தி அனுப்புவதாக கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.இந்நிலையில் கல்லுாரி மாணவி மீது, ஏட்டு சங்கர், எஸ்.பி., நேமகவுடாவிடம் நேற்று அளித்த புகாரில், ''எனக்கும், என் மீது புகார் அளித்த கல்லுாரி மாணவிக்கும், பழக்கம் இருந்தது உண்மை தான். நாங்கள் நெருங்கி பழகினோம். என் அந்தரங்க வீடியோவை, கல்லுாரி மாணவியும், அவரது கூட்டாளிகளும் எடுத்தனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, என்னிடம் பணம் பறித்தனர். கல்லுாரி மாணவியை கைது செய்து, விசாரிக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை