மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெங்களூரு: தென்மேற்கு ரயில்வே சமர்ப்பித்த ஆறு வழித்தடங்களில், தானியங்கி சிக்னலை நிறுவும் திட்டத்துக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் கொடுத்து உள்ளது.பெங்களூரு கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஒயிட்பீல்டு இடையே தானியங்கி சிக்னல் முறை செயலில் உள்ளது.இதுபோன்று கே.எஸ்.ஆர்., பெங்களூரு - யஷ்வந்த்பூர் - எலஹங்கா; யஷ்வந்த்பூர் - அரிசிகெரே; லோட்டேகொல்லஹள்ளி - ஓசூர்; ஒயிட்பீல்டு - ஜோலார்பேட்; பையப்பனஹள்ளி - பெனுகொண்டா (சன்னசந்திரா வழியாக) பெங்களூரு நகரம் - மைசூரு என மொத்தம் ஆறு வழித்தடங்களில், 639.05 கி.மீ., நீண்ட பாதைகளில், 874.12 கோடி ரூபாய் செலவில், தானியங்கி சிக்னலை நிறுவ, ரயில்வே போர்டிடம், தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு அனுமதி கோரியிருந்தது.இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரயில்களின் செயல்திறன் அதிகரிக்கும். ரயில்வே துறையின் இந்நடவடிக்கை பயனியரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இந்த கோரிக்கைக்கு, ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆறு வழித்தடங்களில் தானியங்கி மூலம் சிக்னல்கள் இயங்க துவங்கும்.
2 hour(s) ago
2 hour(s) ago