உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சமாகிறது

ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சமாகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை இரு மடங்காக உயர்கிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகிறது. இதன் வாயிலாக இனி 10 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை நோயாளிகள் இலவசமாக பெற முடியும்.மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ல் துவங்கியது. தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தி வரும் இந்த திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி குடும்பங்கள் பெற்று வருகின்றன. திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6.2 கோடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு 79,157 கோடி ரூபாய் சிகிச்சை செலவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக தீவிர நோய்களாக கருதப்படும் புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இலவச சிகிச்சை பெற முடியும். அதாவது 10 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இதன் வாயிலாக பெறமுடியும். இதற்கான அறிவிப்பு வரும் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது மட்டுமின்றி ஆயுஷ்மான் திட்டத்தில் கிஷான் சம்மன் நிதி பெறும் விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கம் அல்லாத தொழில் செய்பவர்கள், ஆஷா சுகாதார ஊழியர்கள் ஆகியோரை அடுத்த மூன்று ஆண்டுகளில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்த திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை 100 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anathaa
ஜன 18, 2024 17:50

பிரைவேட் ஆஸ்பத்திரிகள் தான் கொள்ளை அடிக்கும்


Las Theodore
ஜன 18, 2024 14:37

0 ...


Raa
ஜன 18, 2024 12:22

மாநில அரசோ, மத்திய அரசோ.... ஒரு நல்ல அரசு இலவசமா தரமான மருத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, இலவசமா இன்சூரன்ஸ் கொடுப்பது கொடுமை என்றுகூட தெரியாத சாமானியர்னுக்கு நோய் வருவது அவசியமே.


duruvasar
ஜன 18, 2024 11:39

மக்களுக்கான நலத்திட்டங்கள் அளிப்பதில் மோடி அய்யா செய்து வரும் இணையற்ற நற்பணிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை