உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், மகன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை: பான் கார்டு வழக்கில் கோர்ட் அதிரடி

சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், மகன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை: பான் கார்டு வழக்கில் கோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் பான் கார்டு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி, நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவராக இருப்பவர் ஆசம்கான். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மகன் பெயர் முகமது அப்துல்லா ஆசம். முன்னாள் எம்எல்ஏ. முகமது அப்துல்லா ஆசம் வெவ்வேறு தேதிகளில் பிறந்ததாக குறிப்பிட்டு 2 பான் கார்டுகளை பெற்றதாக பாஜ எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனா என்பவர் ராம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அவர் தமது புகாரில், ஒரு பான் கார்டில் அப்துல்லாவின் பிறந்த தேதி ஜன.1,1993 என்றும் வேறு ஒரு கார்டில் செப்.30, 1990 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், விசாரணை முடித்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.இந் நிலையில், இந்த வழக்கில் சமாஜ்வாடி தலைவர் ஆசம்கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று ராம்பூரில் உள்ள சிறப்பு எம்பி, எம்எல்ஏ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்ததை அடுத்து, ஆசம் கான் மற்றும் அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் நீதிமன்ற அறைக்குள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.அதன் பின்னர், தீர்ப்பு விவரங்களை நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. மோசடி, குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இருவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V Venkatachalam, Chennai-87
நவ 17, 2025 20:27

தீர்ப்பு கொஞ்சம் பரவாயில்லை. அஸம்கான் ஆபாசமாக பேசுபவர். நடிகை ஜெயப்ரதா எம்.பி. எலக்ஷனில் போட்டியிட்ட போது காது கூசூம் அளவுக்கு மிக மோசமாக தரம் தாழ்த்தி பேசினார். அஸாம் கான் குடும்பம் எப்புடி இருக்கும் என்பது இந்த செய்தியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.இந்த தீர்ப்பு ஒரு ஒப்புக்கு சப்பாணி..


KR india
நவ 17, 2025 20:15

எந்த குற்ற நோக்கமும் இல்லாமல், எந்த முக்கிய தகவலையும் மாற்றாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ரூபாய் 10,000 அபராதம் மற்றும் வருமான வரித்துறையிடம் விளக்கம் அளிக்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து பெற்ற மற்றொரு பான் கார்டு-ஐ முறைப்படி surrender செய்ய வேண்டும் என்று தான் வருமான வரி சட்டம் கூறுகிறது. ஏழு வருட சிறை என்றெல்லாம் இல்லை. இந்த செய்தியை படித்தவுடன், சம்பந்தப்பட்ட சமாஜ் வாதி தலைவர் ஆஸம் கான் மற்றும் அப்துல்லா அவர்கள் அதிகப் பட்ச தண்டனை பெற்று விட்டார்களோ ? என்று நினைத்து, மனிதாபிமான அடிப்படையில், அவர்களுக்கு ஆதரவாக கருத்து எழுத நினைத்த போது, எதற்கும் ஆங்கில இணையதள செய்திளையும் படிப்போம் என்று படித்தேன். அதில் தெளிவாக எழுதி உள்ளனர். அதாவது, 2017 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை பூர்த்தி செய்வதற்காக இரண்டாவது பிறந்த தேதியிட்ட மற்றொரு பான் கார்டு, போலியாக உருவாக்கியுள்ளனர்.


MARUTHU PANDIAR
நவ 17, 2025 19:29

இந்த நாட்டின் நிரந்தர சுமை. கீழே இறக்க முடியாத சுமை.


கரீம் பாய், ஆம்பூர்
நவ 17, 2025 19:15

என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். இல்லையேல் மேல் முறையீடு செய்து தப்பித்து விடுவார்...


பாரதன்
நவ 17, 2025 18:43

நமது நாட்டின் நீதித்துறை சரியாக உறுதியாக நம்பகமாக நாட்டின் இறையாண்மையை காக்கும் விதமாக இருக்க வேண்டும்


Rathna
நவ 17, 2025 17:55

மிக பெரிய மர்ம நபர் ரவுடி. தனது வீடு மாடுகளை மேய்க்க போலீஸ்காரர்களை பயன்படுத்தியவர்.


krishnamurthy
நவ 17, 2025 17:25

சரியான தண்டனையே


krishnamurthy
நவ 17, 2025 17:21

சரியான தண்டனை


Perumal Pillai
நவ 17, 2025 16:47

உன்னை போல உள்ள கிரிமினல்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம்


ديفيد رافائيل
நவ 17, 2025 16:21

ஜாமீன் கொடுத்துடுவாங்க மேல் முறையீடு செய்யும் போது


சமீபத்திய செய்தி