உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச்- 21 ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் பல முறை ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடினார். ஆனால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வரும் ஜூன் 1 ம் தேதி வரை ஜாமினில் விட உத்தரவிட்டனர்.கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது: ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், ஒரு தேசிய கட்சியின் தலைவராகவும் கெஜ்ரிவால் உள்ளார். அவர் மீது தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அவரால் ஆபத்து ஏதும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் ஜாமின் வழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 21 நாட்கள் அவர் சிறையில் இருந்தாலும் அல்லது வெளியில் இருந்தாலும் எந்த மாற்றம் ஏற்படாது.அவர் மீதான வழக்கு 2022 ஆக., மாதம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு மார்ச் 21ல் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவாகி ஒன்றரை ஆண்டுகள் அவர் வெளியில் இருந்துள்ளார். அவர் முன்பே கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் அல்லது பிறகு கைது செய்திருக்க வேண்டும. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். டில்லியில் வரும் 25 ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அவர் லோக்சபா தேர்தல் பிராசரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும். ஜூன் 2ம் தேதி மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.ஜாமின் நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஓரிரு நாளில் கெஜ்ரிவால் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபந்தனைகள் என்ன

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் பின்வருமாறு: * சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிணை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். * லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்தாலும், முதல்வர் அலுவலகத்திற்கோ அல்லது டில்லி தலைமைச் செயலகத்திற்கோ செல்லக்கூடாது. * கவர்னர் சக்சேனாவின் அனுமதியின்றி எந்த ஆவணத்திலும் கையெழுத்து போடக்கூடாது * டில்லி அரசின் மதுபானக் கொள்கை குறித்தோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு குறித்தோ எங்கும் விவாதிக்கக்கூடாது. * சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது

தலைவர்கள் மகிழ்ச்சி

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும். கெஜ்ரிவால் வெளியே வருவது நீதியை நிலைநாட்டுவதுடன், இண்டியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் எனக்கூறியுள்ளார்.கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் விரைவில் வெளியே வருவார் எனக்கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

MADHAVAN
மே 11, 2024 14:01

சீப்பை மறைத்துவைச்சு கல்யாணத்தை நிறுத்தமுயற்சிப்பண்ணும் பிஜேபி சங்கிகளுக்கு, அதிர்ச்சியாகத்தான் இருக்கும்,


Mohan
மே 12, 2024 15:02

பொத்தாம் பொதுவாக பேசும் உபிக்கள் மூளை வளரச்சி அடையாதவர்களே


Velan Iyengaar
மே 10, 2024 22:54

உலகமகா பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் bj கட்சியின் மருந்தை அவர்களுக்கு திரும்பி தருகிறார் நாளை காலை கணாட் place அருகில் உள்ள ஹனுமான் கோவிலில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் ஹா ஹா ஹா இனி ஜல்சா கட்சியினர் எதை சொல்லி இவர்களை வில்லனாக சித்திருப்பார்கள் ???


Velan Iyengaar
மே 10, 2024 22:27

ஆங்கிலத்தில் galavnising என்பார்கள் அது இப்போது அடுத்த கட்ட தேர்தல்களில் நடக்கும் அடாவடிக்கு எதிராக உச்சநீதிமன்றமே தீர்ப்பு தந்து இருக்கு என்பதை இந்திய மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு INDIA கூட்டணிக்கு இருக்கு அதை நிச்சயம் செய்யும் செய்யவேண்டும் மக்களை இனியும் ராமர் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது இனியும் பாகிஸ்தான் பெயரை சொல்லி ஏய்க்கமுடியாது இந்து பாரத திருநாடு இந்த நாட்டை பிளவுவாதம் வெற்றிகொள்ள அனுமதிக்கக்கூடாது


rao
மே 11, 2024 09:41

Are U talking about Scamgress and opposition parties.


Velan Iyengaar
மே 10, 2024 22:15

கைது ஒரு அடாவடி நடவடிக்கை ஒரு பிரதான கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை முடக்கும் கேடுகெட்ட எண்ணத்துடன் எடுக்கப்பட்ட மட்டமான நடவடிக்கை உச்சநீதிமன்றம் அந்த அடாவடியை தட்டி கேட்டுள்ளது இது ஆளும் தரப்புக்கு சம்மட்டி அடி மீளவே முடியாத பின்னடைவு bj கட்சிக்கு ஏற்பட்டுள்ளது


Velan Iyengaar
மே 10, 2024 22:13

இந்த ஜாமீன் அடுத்த கட்ட தேர்தல்களில் ஏற்படுத்தப்போகும் மாபெரும் விளைவை கண்டு உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி கதிகலங்கி போய் இருக்கு உச்சநீதிமன்றம் இந்த கைதை ஒரு ராசியில் நடவடிக்கையாக பார்த்துள்ளது என்பது மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளளது சூறாவளி பிரச்சாரம் செய்து NDA வை கதிகலங்க வைக்கப்போகிறார்கள்


Velan Iyengaar
மே 10, 2024 21:43

இந்த வழக்கு ஒரு புனையப்பட்ட வழக்கு நேரடியாக சட்டவிரோத பணம் கேஜ்ரிவாலிடம் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை அமுலாக்கத்துறை சமர்ப்பிக்கவில்லை ஏனெனில் இதுவரை அப்படி எதுவும் இவர்களிடம் கிடைக்கவில்லை ஒரு அப்ப்ரூவராக மாறிய ஆசாமியின் வாக்குமுள்ளத்தை மட்டுமே புனையப்பட்டுள்ள வழக்கு இவர்களுக்கு குற்றத்தை நிரூபிக்கும் எண்ணம் இல்லை குற்றம் சுமத்தி சமூகத்தில் இவர்கள் பெயரை கெடுக்கும் எண்ணம் மட்டுமே தீர விசாரித்தபிறகு கோர்ட்டு ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யும், சர்வ நிச்சயமாக வாக்குமூலம் கொடுத்தவன் வரலாறை பார்த்தல் அது இன்னும் மோசமான வரலாறு இவனும் குற்றம் சுமத்தப்பட்டவனே இவன் bj கட்சிக்கு தேர்தல்பத்திரம் நன்கொடை கொடுத்தது அம்பலம் அப்படி கொடுத்து அவன் தப்பவேண்டும் எனில் அப்ரூவராக வாக்குமூலம் தந்தாள் மட்டுமே அவனை விடுவதாக பேரம் நடத்தப்பட்டுள்ளது உண்மையில் சட்டவிரோத பணம் கைமாறியதற்கான ஆதாரம் bj கட்சிக்கு எதிராக தான் இருக்கு அமுலாக்கத்துறை bj கட்சி மீது வழக்கு தொடர்ந்தால் அதை மிக சுலபமாக நிரூபிக்கமுடியும் தேர்தல் பத்திர நூலை பிடித்துக்கொண்டு சென்றால் அது நேராக இந்த கேடுகெட்ட ஜல்சா கட்சியிடம் தான் சென்று சேரும்


ஆரூர் ரங்
மே 11, 2024 10:53

நூறு ஐ போன் களை பயன்படுத்திய பிறகு உடைத்துப் போடும் அளவுக்கு ஆட்டையை போட்டுள்ளார். ஏழைகளின் வரிப்பணம் ஐம்பது கோடியில் மாளிகை கட்டி வாழும் நேர்மையான ஏழைப் பங்காளருக்கு இப்படி


Velan Iyengaar
மே 10, 2024 21:35

ஒரு அடாவடியை ஒரு தடாலடி தீர்ப்பு மூலம் தான் சரி செய்ய முடியும் உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்புகளை கொடுத்து நீதி சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க செய்துள்ளது இதை மேற்கோள் காட்டி வேறு எந்த வழக்கிலும் வழக்காட முடியாதவண்ணம் தீர்ப்பின் கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கு இது ஒரு முன்னுதாரணமாகிவிடும் என்று கதறுபவர்கள் முழு தீர்ப்பையும் வாசித்துவிட்டு கதறவும்


இராம தாசன்
மே 10, 2024 21:12

தவறான முன்னுதாரணம்


Syed ghouse basha
மே 10, 2024 19:51

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதர்மம் விலகும் தர்மம் வெல்லும்


karthik
மே 10, 2024 19:24

அநீதிக்கு எதிரான வெற்றியா? வெக்கமே இருக்காதா உங்களுக்கு எல்லாம்?


மேலும் செய்திகள்