உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு நன்கொடை பெற தொண்டு நிறுவனத்துக்கு தடை

வெளிநாட்டு நன்கொடை பெற தொண்டு நிறுவனத்துக்கு தடை

புதுடில்லி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு, சி.பி.ஆர்., எனப்படும் கொள்கை ஆராய்ச்சி மையம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துஉள்ளது.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'சென்டர் பார் பாலிசி ரிசர்ச்' என்ற தொண்டு நிறுவனம், பல்வேறு துறைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.யாமினி அய்யர், தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம், பல நாடுகளில் இருந்து நன்கொடைகள் பெற்று வந்தது.உலக வங்கி, போர்டு அறக்கட்டளை, பில் அண்ட் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை என, பல அறக்கட்டளைகள், இந்த அமைப்புக்கு நன்கொடைகள் அளித்து வந்தன.இதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஒய்.வி.சந்திரசூட் உள்ளிட்டோர் இருந்து உள்ளனர்.இந்த அமைப்பு, வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், கடந்தாண்டு, பிப்ரவரியில் இடைக்கால தடை விதித்தது. எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், அதன் விதிகளை மீறியதாக, இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக பெறப்படும் வெளிநாட்டு நன்கொடைகளை, வேறு திட்டங்கள், பிரசாரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து, அமைப்பின் சார்பில் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில், வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு இந்த அமைப்புக்கு நிரந்தர தடை விதித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalnivelu
ஜன 18, 2024 12:06

ஜான் சோரோஸின் பேனாமி அமைப்புதான் இந்த தொண்டு நிறுவனம்.


duruvasar
ஜன 18, 2024 11:36

இதெல்லாம் அந்த கிரிப்டோ குரூப்பாக இருக்கும் என புரிகிறது.


Sridhar
ஜன 18, 2024 11:32

மணிசங்கர் அய்யரின் பொண்ணு பிராடா இல்லாம ஒழுக்கமா இருந்தாதான் ஆச்சரியம். இவ்வளவு நாளா எப்படி விட்டுவச்சானுங்க?


raghavan
ஜன 18, 2024 10:43

The main person is Yamini Iyer, daughter of Mani Sankar Iyer


NicoleThomson
ஜன 18, 2024 08:02

வேதனை , சந்திரசூட் காசுக்காக மோசம் போனவனா


அப்புசாமி
ஜன 18, 2024 07:23

ஜால்ரா அடிக்கத் தெரியலை. அதான்.


Sankar Ramu
ஜன 18, 2024 05:54

எல்லாம் மத மாற்றும் சக்திகள். இலவச நிலம் வீடு பணம் கொடுத்து மத மாற்றும் மத வெறியர்கள். ஆடிட் செய்து பணம் கொடுத்தவங்களையும் தடை செய்யனும்.


அப்புசாமி
ஜன 18, 2024 11:34

யாமினி அய்யர் மதம் மாத்தறாரா? சொல்லவே இல்லியே.


வெகுளி
ஜன 18, 2024 05:00

வெளிநாடு எதுவும் சுயநலமின்றி சும்மா நன்கொடை கொடுக்காது... தீர விசாரியுங்கள்....


Bhakt
ஜன 18, 2024 03:38

சூப்பர்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி