உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு வங்கதேசத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு வங்கதேசத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: சர்ச்சைக்குரிய இந்திய இஸ்லாமிய மத போதகரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான ஜாகிர் நாயக்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க, வங்கதேச இடைக்கால அரசு தயாராகி வருகிறது.ஜாகிர் நாயக் என்பவர் ஒரு மருத்துவர். இவர் தன் பணியில் இருந்து விலகி, முஸ்லிம் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தளமாகக் கொண்ட இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மத ரீதியில் மோதல்களை ஏற்படுத்துவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நாயக் தற்போது மலேஷியாவில் வசித்து வருகிறார். இவருக்கு அந்நாடு புகலிடம் அளித்துள்ளது.இந்நிலையில், மத சொற்பொழிவுக்காக நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஜாகிர் நாயக். வரும் நவ., 28 முதல், டிசம்பர் 20ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஜாகிர் நாயக்கின் முதல் வங்கதேச பயணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

oviya vijay
அக் 28, 2025 19:44

அடிமை abdul...இந்து மதம் பற்றி எவ்ளோ பேர் கேவலமாக பேசிய பொது ஒரு இஸ்லாமியர் கண்டனமாவது தெரிவித்தார்களா?


Abdul Rahim
அக் 28, 2025 17:46

இஸ்லாத்திற்கு எதிராக பேசி வங்கதேச அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஸ்லிமா நஸிரீனுக்கு என்ன hair கு இந்திய சங்கி அரசு அடைக்கலம் கொடுத்தது ?? எவனாச்சும் சொல்லுங்க பார்ப்போம் ???


Santhakumar Srinivasalu
அக் 28, 2025 12:40

வங்க நாட்டவன் நடவடிக்கை தீவிரவாத ஆதரவளன் போல் உள்ளது.


Abdul Rahim
அக் 28, 2025 17:56

தஸ்லிமா நஸிரீனை ஆதரிக்கும் நடவடிக்கை பற்றி பேசுங்களேன்


தலைவன்
அக் 28, 2025 09:40

என்னது குற்றவாளியா?? தவறாக குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே உண்மை.


Anand
அக் 28, 2025 10:45

நீ மட்டுமல்ல, ஏனைய கேடுகெட்ட கழிசடைகளும் அவனை தூக்கி பிடித்துக்கொண்டிருக்கிறது.


N Sasikumar Yadhav
அக் 28, 2025 12:15

உங்களது முட்டு மிக கேவலமாக இருக்கிறது. பயங்கரவாத இஸ்லாமை பரப்பியவன் குற்றவாளிதான். குற்றம்சாட்டப்பட்ட என்பது உங்களின் கேவலமான வாதம் இதுபோன்ற வாதங்கள் வைக்க மதவெறி பிடித்த ஆட்களால் மட்டுமே முடியும்


kamal 00
அக் 28, 2025 08:22

டாக்டர் வேலைய விட்டுட்டு சேவை செய்றானாம்.


Abdul Rahim
அக் 28, 2025 11:27

பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்


சாமானியன்
அக் 28, 2025 07:14

ஜாகீர் நாயக்கின் ஒரு சில பிரசங்கங்களை நானும் பார்த்துள்ளேன். தனக்கு வேண்டியவர்களை வைத்தே கேள்வி கேட்க வைக்கிறார். இஸ்லாத்திற்கு எதிரான கேள்விகட்கு மௌனம்.அல்லது ஏதாவது உபநிடதங்களை சுட்டிக்காட்டி சம்பந்தா சம்பந்தமில்லாமல் தைரியமாக உளறுவார். என்ன ஜன்மமோ !


visu
அக் 28, 2025 06:05

ஹ்ம்ம் மர்ம மனிதர்களுக்கு வேலை வந்து விட்டது


Krishna
அக் 28, 2025 04:35

AntiNation AntiNativePeople Traitors Must be Encountered Whereever they Hide


Kasimani Baskaran
அக் 28, 2025 04:13

தீவிரவாதிகளை உள்ளே விட்டால் ஆபத்து என்று தெரியாத நோபல் பரிசு பெற்ற நபர்...


Santhanakrishnan Ramachandran
அக் 28, 2025 04:09

எனக்கு தெரிந்து இது அவனுடைய கடைசி பயணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. வங்கதேசத்திலேயே இவன் இறந்து விடுவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை