உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் வங்கதேச அரசு உறுதி

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் வங்கதேச அரசு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதிமொழி அளித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிந்துக்களின் வீடுகள், சொத்துகள், கோவில்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் பேரணி நடத்தினர்.நேற்று டில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, '' வங்கதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் கவலை கொண்டு உள்ளனர் '' எனப் பேசியிருந்தார்.இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முகமது யூனுஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஜனநாயகம், ஸ்திரமான, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும். வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவர் உறுதிமொழி அளித்தார். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sathyanarayanan Sathyasekaren
ஆக 16, 2024 23:15

இந்துக்களின் மீது தாக்குதல்கள் நடப்பது நிறுத்தப்படும் வரை பங்களாதேஷுக்கு ஹிந்துஸ்தானில் இருந்து ஒரு பொருளும் செல்லக்கூடாது. ஹிந்துக்களின் நிறுவனங்களில் வேலை செய்யும் வங்காள முஸ்லிம்களை நீக்கவேண்டும். இப்படி ஏதேனும் மறுபடி நடந்தால் இங்கு முஸ்லீம் நிறுவங்களிலோ, அவர்கள் கடைகளிலோ எதுவும் வாங்கக்கூடாது. அப்போதுதான் புத்தி வரும்.


Barakat Ali
ஆக 16, 2024 21:45

ஆ ராசா கிட்டே கேட்டேன் .... தப்பு எதுவும் நடக்கலை ன்னு சொல்ட்டாரு என்று மன்மோகன் கூறினார் .... அதைப்போலத்தான் இதுவும் ....


Ramesh Sargam
ஆக 16, 2024 21:30

வங்கதேசத்தில் வாழும் இந்தியர்களுக்கு என்னுடைய அரசு பாதுகாப்பு அளிக்கும். இது உறுதி. ஆனால் உங்கள் நாட்டிலேயே தமிழகம் போன்ற மாநிலங்களில் ஹிந்துக்களின் பாதுகாப்பு எப்படி, என்று அவர் கேட்கிறார்.


Sivagiri
ஆக 16, 2024 19:28

ஒரு சாயலில் , நம்ம ஸ்டாலின் அண்ணன் மாதிரி இருக்காரு - வாக்குறுதிகளும் அப்பிடித்தானோ ? . .


SRISIBI A
ஆக 16, 2024 18:42

பாகிஸ்தான் பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் இந்திய முஸ்லிம்களிடம் இந்துக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய முடியாது இவர்களிடம் சொல்லி கொடுத்து வளர்த்து வருவதெல்லாம் முஸ்லீம் அல்லாஹ் வர்கள் கொலை செய்யுங்கள் என்பதுதான்


Mohan
ஆக 16, 2024 18:12

ஆமாம். பெரிய உறுதி வரம கொடுத்தவன் தலைலேயே கை வைத்த மகிஷாசுரனைப் போன்றவர்கள் பங்களாதேசத்தினர். அதுவும் அடிப்படைவாத டிரெயினிங் எடுத்த ஐ.எஸ்.ஐ. யின் கை பொம்மைகளாக மாணவர்கள் இருக்கும் வரை எதையும் பங்களாதேசத்திடமிருந்து எதிர் பார்ப்பது தவறு.


கண்ணன்,மேலூர்
ஆக 16, 2024 19:07

சொன்னபடி செய்யவில்லை என்றால் அப்றம் இந்தியாவின் ருத்ர தாண்டவத்தை பங்ளாதேஷ் என்ற நாடு தாங்க முடியாது


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி