உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி வழக்கறிஞர்கள் நீக்கம்: இந்திய பார் கவுன்சில் அதிரடி

போலி வழக்கறிஞர்கள் நீக்கம்: இந்திய பார் கவுன்சில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லியில், 107 போலி வழக்கறிஞர்களை நீக்கி, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, இந்திய பார் கவுன்சில் செயலர் ஸ்ரீமந்தோ சென் வெளியிட்ட அறிவிப்பு:உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பார் கவுன்சில் மற்றும் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் தொடர்ச்சியான விசாரணைகள் வாயிலாக, போலி வழக்கறிஞர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 'பார் கவுன்சில் ஆப் இந்தியா' சான்றிதழ் விதிகளின் விதி 32, கடந்த ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தம், சரிபார்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தியதுடன், பி.சி.ஐ.,யை மிகவும் திறம்படவும், முறையாக அடையாளம் காணவும் அனுமதிக்கிறது. அதாவது, தகுதியற்ற, போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை பதிவில் இருந்து நீக்க, இந்த திருத்தம் அனுமதிக்கிறது. கடந்த 2019 -- 2023 ஜூன் 23க்கு இடையில், பல ஆயிரம் போலி வழக்கறிஞர்கள் நீக்கப்பட்டனர். அவர்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த முழுமையான விசாரணைக்கு பின், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வழக்கறிஞர் தொழிலில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்திய பார் கவுன்சில், 2019ம் ஆண்டு முதல், டில்லியில் உள்ள வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து, 107 போலி வழக்கறிஞர்களை நீக்கிஉள்ளது. தங்கள் மோசடி வெளிப்படுமோ என்ற அச்சத்தில், தங்கள் பதிவு சான்றிதழை முன்கூட்டியே பலர் ஒப்படைத்து உள்ளனர்.அனைத்து மாநில பார் கவுன்சில்களும், இது போன்ற சரணடைதல்களை ஏற்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலி வழக்கறிஞர்கள், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல், விலகிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அவர்களின் ஏமாற்று செயல், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்; நீதி அமைப்பை சமரசம் செய்து கொள்வது போல் ஆகிவிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Tamilselvan ksTs
மார் 16, 2025 16:48

கும்பகோணம் நீதிமன்றம் வக்கீல் பணிபுரியும் பிரேம் குமார் மகாலிங்கம் என்பவர் ஒரு b கம் முழுமையாக படிக்கவில்லை அரியர் அதிகம் இருக்கிறது அதுக்குள்ள சட்டம் படிப்பு 4 5 மதத்தில் படித்து முடித்து விட்டார் இது இவர் யாருக்காக அதிகமாக யாருக்காக போலி பத்திரங்களை தயாரித்து சில இடங்களை பெயர் மாற்றம் செய்வோம் விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது இவர் நிலத்து பத்திரங்கள் பட்டாக்கள் மட்டும் போலியாக தயாரிக்கவில்லை நம் நாட்டின் இந்திய சட்டத்தின் ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த கும்பலை இவர்களுக்கு மேல் யாரோ ஒரு பெரிய மனிதன் இருக்கிறார் ஒருநாள் கூட போகாமல் இவர் தம்பி எம்பிஏ பட்டா சான்றிதழை வாங்கி இருக்கிறார் கல்லூரி வாசலுக்கு கூட போகாத இவர் தம்பி சபரிநாதன் எம்பிஏ பட்டத்தை பெற்றிருக்கிறேன் என்று திருமண பத்திரிக்கையில் பெற்றிருக்கிறார் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துக் கொண்டு தேர்ச்சி பெறாமல் அவர்கள் படும் கஷ்டத்தில் எத்தனை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு மட்டும் புதுசாக வீட்டில் இருந்தபடி இவர் செய்த தொழில் வேற இவர் எம்பிஏ பட்டம் எப்படி வாங்கினார் தெரியவில்லை இதற்கு உதவினவர்கள் யார் என்று தெரியவில்லை? நம் நாடு எப்படி முன்னேறும் இப்படி இருந்தால்


Tamilselvan ksTs
மார் 16, 2025 16:24

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்காவில் உள்ள நீதிமன்றத்தில் போலியான வக்கீல் உள்ளனர் அவர்கள் போலியான பாத்திரம் தயார் பண்ணி சில தவறுகள் நடந்து கொண்டு வருகிறது


R.Varadarajan
அக் 28, 2024 21:50

கருப்பு வெள்ளை சீருடையில் நீதிமன்றங்களில் சுற்றித்திரியும் திராவிட மற்றும் இதர தமிழர்கட்சிகளைச்சேர்ந்த பலரும் இதே வகைதான் அவர்களைப்பிடுத்மை அவர்களைடைய சான்றிதர்களை க்கோரி ஆராய்ந்தால் உண்மை நிலைமை வெட்டை வெளிச்சமாகும்


muthu krishnan
அக் 28, 2024 18:51

உண்மையை உரக்கச் சொல்லலாம்


GMM
அக் 28, 2024 13:50

23.62023 வரை பல ஆயிரம் போலி வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் மூலம் நீக்கப்பட்டனர். பார் கவுன்சில் மத்திய நீதி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல ஆயிரம் போலி வக்கில் வாதம் செல்லுமா? 107 போலி வக்கீல் நீக்கம். நிர்வாக நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். பதிவு சான்று ஒப்படைத்தாலும் அரசுக்கு தெரியாமல் பெற முடியாது. கூடாது. அனைத்து மாநில பார் கவுன்சில் முறைகேடுகளை விசாரிக்க அரசு நீதித்துறை / அரசியல் சாராத அமைப்பு மூலம் விசாரித்து, மாநில அளவில் கவர்னர், உச்ச நீதிமன்றம் அளவில் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.


N.Purushothaman
அக் 28, 2024 12:27

தமிழ்நாட்டு பார்ல சட்டை கிழிப்பு அடிதடி பண்றதுக்கே நேரம் பத்தலை ..இதுல எங்க போலியை கண்டுபிடிக்கிறது ?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 28, 2024 12:13

இன்றைக்கு வழக்கறிஞர்கள் அரிதாகவே உள்ளனர். எல்லாமே கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிதான். குற்றவாளிகளின் கடைசி புகலிடம் போலீஸ், வழக்கறிஞர் அப்புறம் அரசியல். இப்படித்தான் உள்ளது. நல்ல, நேர்மையாளர்கள் கொஞ்ச பேர்தான். அவர்களால்தான் இன்றைக்கும் இது கொஞ்ச உயிர்ப்புடனாவது உள்ளது.


raj82
அக் 28, 2024 11:05

பிரஸ்டு இந்த திருப்பதி லா காலேஜ் ஜெ மூடுங்க ப ஒரே தொல்லை யா போச்சு


வைகுண்டேஸ்வரன்
அக் 28, 2024 10:35

....தமிழ்நாட்டிலும் இதுபோல்... " - அதான பார்த்தேன்.. தங்கள் மாநிலத்தைக் கேவலப்படுத்தி தானே


Kanns
அக் 28, 2024 10:07

Sack& Punish Advocates Encouraging FalseCases, Charging MegaLootFees esp Seniors& Middle, NotArguing for Detecting-Punishing Power-Misusing Vote-Hungry PartiesMen/ Stooge Officials esp Case-Hungry Police& Judges/NewsHungry Media/Vested False Complainant Gangs esp women, unions/groups, SCs, advocates etc etc


சமீபத்திய செய்தி