உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பசவராஜ் ஹொரட்டி லிம்கா சாதனை

பசவராஜ் ஹொரட்டி லிம்கா சாதனை

பெங்களூரு: ஒரே தொகுதியில் இருந்து, தொடர்ந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட, கர்நாடக சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியின் பெயர், 'லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் சேர்ந்துள்ளது.ஆசிரியர் தொழிலில் இருந்து, அரசியல்வாதியாக மாறியவர் பசவராஜ் ஹொரட்டி. பல ஆண்டுகளாக ம.ஜ.த.,வில் இருந்தவர். 43 ஆண்டுகளாக எம்.எல்.சி.,யாக பதவி வகிக்கிறார்.மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, 11 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் பசவராஜ் ஹொரட்டி, 1980லிருந்து, மேற்கு ஆசிரியர் தொகுதியில் இருந்து தொடர்ந்து, எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.முந்தைய சட்டசபை தேர்தல் நேரத்தில், ம.ஜ.த.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சட்டமேலவை தலைவராக பதவி வகிக்கிறார். ஒரே தொகுதியில், தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்ற இவரது பெயர், 'லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை