உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயன்: பிக்கி கூட்டமைப்பு வரவேற்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயன்: பிக்கி கூட்டமைப்பு வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் மிகவும் வரவேற்கதக்கது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 'பிக்கி' தெரிவித்துள்ளது.இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு( எப்.ஐ.சி.சி.ஐ.,) தலைவர் ஹர்ஷ வர்தன் அகர்வால் ஒரு செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது:இந்த பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள் பல உள்ளன. தேசிய உற்பத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன். ஏற்றுமதி ஊக்குவிப்பு மிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொம்மைகள், சுற்றுலா, காலணிகள் உற்பத்தி, தோல் பொருள் போன்ற சில உழைப்பு மிகுந்த துறைகளில் உற்பத்திக்கு இது உதவும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில் அரசு சில முயற்சிகளை அறிவித்துள்ளது. இவை அனைத்தும் நேர்மறையான திசையில் உள்ளன.இவ்வாறு ஹர்ஷ வர்தன் அகர்வால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
பிப் 02, 2025 12:31

நிறைய நிதி கடனா கிடைக்ஜப் போகுது. வாங்கிக்கோங்க. திருப்பி கட்ட முடியலைன்னா வாராக்கடன் வங்கில சேத்துருவாங்க. முத்ரா கடன்ல நிறைய வசூலாகலைன்னு கேள்விப் படுகிறேன்.


முக்கிய வீடியோ