உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்னுாக்கர் போட்டியில் சாதித்த பெங்., சிறுமி 

ஸ்னுாக்கர் போட்டியில் சாதித்த பெங்., சிறுமி 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். இதற்கு எடுத்துக்காட்டாக விளையாட்டில் பெரியவர்கள் சாதிக்கும் அளவிற்கு இளம்தலைமுறையும் சாதித்து வருகிறது. பெங்களூரு சிறுமி ஸ்னுாக்கர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து உள்ளார்.இந்த சாதனை சிறுமியின் பெயர் நடசா சேத்தன், 16. தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், முதல்முறை ஸ்னுாக்கர் விளையாட ஆரம்பித்தார். ஸ்னுாக்கர் பந்தை குறிபார்த்து அடிப்பதில் திறமைசாலியாக மாறினார். இதனால் கர்நாடக மாநில பில்லியர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக அளவிலான போட்டி நடந்தது. தாய்லாந்தின் நருசா பொயம்புலை வீழ்த்தி, நடசா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.நடசா குறித்து அவரது தாய் லீனா கூறுகையில், ''நடசாவின் செல்ல பெயர் டியா. அவர் முதன்முதலாக 13 வயதில் ஸ்னுாக்கர் விளையாட போது, அவர் விளையாடிய விதத்தை பார்த்து மெய்சிலித்து போனேன். கண்டிப்பாக ஒரு நாள் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று நினைத்தேன். அது 3 ஆண்டுகளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஸ்னுாக்கர் தான் இப்போது நடசாவின் முன்னுரிமையாக உள்ளது. படிப்பு எல்லாம் இரண்டாவது தான். பங்கஜ் அத்வானி தான் நடசாவின் ரோல் மாடல். ஸ்னுாக்கரில் அவர் இன்னும் நிறைய சாதிக்க, எனது வாழ்த்துக்கள்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை