உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தா மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மம்தா மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மம்தா பானர்ஜிக்கு எதிராக, மேற்கு வங்க கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணையை கோல்கட்டா ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பேசும் போது, ‛‛சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்காக மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று(ஜூலை 03) விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து, புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். விண்ணப்பத்தில் தேவையான மாற்றங்களை செய்த பிறகு நாளை (ஜூலை 04) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan
ஜூலை 03, 2024 16:14

.கவர்னர் ..சி எம் மேல புகார் குடுக்குற நிலமைல தான் வெச்சிருக்கு இந்த மோடி அரசு இதுவே காங்கிரஸ் ஆட்சியா இருந்திருந்தா இந்நேரம் அதான் இன்னிக்கி நாடாளுமன்றத்துல கதற விடுறாங்க ......


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி