உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு

வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு

சென்னை: வங்கமொழியை வங்கதேச நாட்டின் மொழி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய டில்லி போலீசாரின் செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கமொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய டில்லி போலீஸாருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார். டில்லி போலீசாரின் இந்த செயல் ரவிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் தாய்மொழிக்கு அவதூறு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது, என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, டில்லி போலீசாருக்கு செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; 'மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி போலீஸ், பெங்காலி மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டுள்ளது. இது நம் தேசிய கீதம் எழுதப்பட்ட மொழியை நேரடியாக அவமதிக்கும் செயல். இந்த பிழை தற்செயலானது அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைத்து மதிப்பிடும் ஒரு இருண்ட ஆட்சியின் மனநிலையாகும். ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மேற்கு வங்க மொழிக்கும், அம்மாநில மக்களுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பாதுகாவலராக நிற்கிறார். இந்தத் தாக்குதலுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுப்பார்,' எனக் குறிப்பிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

vbs manian
ஆக 04, 2025 18:32

ஆஹா என்ன பாசம் .வேண்டும் பொது தாகூர் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் எல்லோரையும் தொட்டு கொள்வார்கள். மற்ற நேரங்களில் நேர் எதிர்மறை நிலைப்பாடு. இந்த ஆன்றோர்களின் தேசிய பார்வை பொது வாழ்வில் நன்னெறி இவையெல்லாம் தெரியாது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2025 15:12

மேற்குவங்கத்து ஓஆத்தா பேசுனது அப்படியே திராவிடியாள் கலாச்சாரம் .......... அதாவது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சென்சிடிவ் விஷயத்தை மொழி, இன அரசியலாக திசை திருப்புவது .......


தஞ்சை மன்னர்
ஆக 04, 2025 13:57

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2025 15:08

அசிங்கப்படவே மாட்டியா ? கயிற்றைத்தேடி ஓடுவாய் .......


vivek
ஆக 04, 2025 17:22

திருடனுக்கு திருடன் நண்பன்..போலீசை கண்டால் மருத்துவமனைக்கு ஓட்டம்....புரிந்தவன் பிஸ்தா


SUBRAMANIAN P
ஆக 04, 2025 13:53

அந்தம்மாவுக்கு தமிழ் தெரியாது. இந்தாளுக்கு ஹிந்தியும் தெரியாது, இதைப்போல ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் உலகமகா அறிவாளிகள்தான்


நரேந்திர பாரதி
ஆக 04, 2025 19:25

ரெண்டுமே பே...பே...பே... தான்


நரேந்திர பாரதி
ஆக 04, 2025 13:37

இங்கே தமிழே ததிங்கிணத்தோம் இதுல பெங்காலி வேறயா?


Siva Balan
ஆக 04, 2025 12:47

இரண்டும் இரண்டு பைத்தியங்கள். வங்கதேசத்தினரை சட்டவிரோதமாக குடியேறியதற்காக கைது செய்துள்ளனர். அவர்கள் வங்கதேச மொழியில் பேசியதால் அப்படி கூறினார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 04, 2025 12:47

அரபி நாடுகளில் தமிழனாக இருந்தாலும் ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி என்றுதான் சொல்வார்கள். நம்ம அப்பாடக்கர் அங்க போயி குரல் கொடுப்பாரா?


தஞ்சை மன்னர்
ஆக 04, 2025 14:02

நீ என்ன பெரிய அப்பாடக்கர்


Ganapathy
ஆக 04, 2025 15:12

தஞ்சை மன்னனா நீயும் ஒரு திராவிட களவாணி சொம்பா? ஐய்யஹோ..


vivek
ஆக 04, 2025 15:39

தஞ்சை மன்னா...நீ பித்தளை அண்டா.இல்லை அலுமினிய அண்டாவா ....இவளோ தாங்குறாய்


Selva
ஆக 04, 2025 12:47

மத்திய அரசு தமிழகம் என்றால் தமிழ் "நாடு" என்று சொல்லச் சொல்லி தகராறு செய்கிறீர்கள். அதே நேரம் அவர்கள் வங்க "தேசம்" என்று சொன்னால் வங்காளம் என்று சொல்லச் சொல்லி தகராறு செய்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும் ஸ்டாலின் சார்?


Ganapathy
ஆக 04, 2025 12:44

பெங்காலி பொண்ணுங்களை வச்சு இங்க சன் பிலிம்ஸ் தொழில் பண்ணுறானுங்க..அதுக்குத்தான் இந்த முட்டு...ஆனா பாரரத்திலிருந்தே தனியா போரேன்னு சொன்னவனுக்கு பாரத மொழிகளைப்பற்றிய கவலை?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 04, 2025 12:42

ஒரு டெல்லி காவல்நிலைய எழுத்தர் கோட்டுக்கு சமர்பித்த கடிதத்தில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒன்று: வங்க தேசத்தில் பேசப்படும் மொழியை பங்களாதேஷி என்று குறிப்பிட்டது தவறாகவே இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் அவ்வப்போது நடப்பதுதான். பிழையாக இருந்தால் சரிசெய்துவிட்டு போகவேண்டியதுதான். இரண்டு: வங்கதேசத்தில் பேசப்படும் பெங்காலி, உருது, அரபி, பார்சி மொழிகளின் கலப்புடன் பெரும்பாலும் சாதாரண பெங்காலி பேசுபவர்கள்கூட புரிந்துகொள்ள முடியாதபடிதான் இருக்கும். இந்தியாவில் பேசப்படும் உருதுவில் அரபி, பார்சி கலப்பு இருப்பதால் அதை ஹிந்தி என்று எப்படி நாம் ஏற்றுக்கொள்வதில்லையோ அப்படித்தான் வங்கதேசத்தில் பேசப்படும் பங்களாதேஷி மொழியும். இந்தியர்கள் ஹிந்தியையும், உருதுவையும் வேறுபடுத்தி பார்ப்பதுபோலதான். இதில் உடனே மத்திய அரசுக்கு எதிராக மொழி பிரிவினை அரசியல் செய்பவர்கள் மு ... கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை