உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பு: உறுதி அளித்தார் நிதின் கட்கரி!

அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பு: உறுதி அளித்தார் நிதின் கட்கரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'வரும் காலங்களில், அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை உருவாக்குவோம்,' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சாலை மற்றும் பாலம் கட்டுதல் குறித்து இரண்டு நாள் கருத்தரங்க துவக்க விழா நடந்தது. கருத்தரங்கம் துவக்க விழாவில், நிதின் கட்கரி பேசியதாவது:வரும் காலத்தில், அமெரிக்காவை விட சிறந்த சாலைகள், கடல் மார்க்க போக்குவரத்து மற்றும் ரயில்வே போக்குவரத்தை, குறைந்த செலவில் கட்டமைத்து விடுவோம்.குறைந்த செலவில் அனைத்து போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தினால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.அத்தகைய திட்டங்களை வகுக்க, சிறந்த நிபுணர்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி, 'அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால் அமெரிக்க சாலைகள் நன்றாக இல்லை. அமெரிக்க சாலைகள் நன்றாக இருப்பதால் அமெரிக்கா பணக்கார நாடாக உள்ளது' என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. அதன்படி, வரும் காலத்தில், இந்திய சாலைகள் கட்டமைப்பு, அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும். அதை நாங்கள் செய்து காட்டுவோம்.இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Dhurvesh
அக் 19, 2024 22:33

நீங்கள் அங்கு கொட்டுவது எங்கள் வரிப்பணம் அது தெரியுமா


kuruvi
அக் 19, 2024 21:50

நம் நாடு கிராமங்கள் நிறைந்த நாடு.நெடுஞ்சாலைகள் ஒட்டி கிரமங்கன் நிறைந்தது. நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது கிராமத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு புகவும் நெடுஞ்சாலைகளில் இருந்து கிராமங்களுக்கு வெளியேறவும் இணைப்பு சாலகள்exit and entry அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.சென்னை பெங்களூரு சாலையில் இவைகள் இல்லை.இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் இருசக்கர வாகனங்கள் உபயோகம் அதிகமுண்டு.நெடுஞ்சாலைகளில் செல்லும்போது இருசக்கர வாகனங்கள் ஒதுங்கி பெரியவாகணங்களுக்கு வழிவிடும் அமைப்பையும் ஏற்படுத்தவேண்டும்.தார் சாலையை ஒட்டி இருக்கும் மண் சாலை மழையில் அரித்து பள்ளங்கள் ஏற்படுவதை தடுக்கும் வழியில் சாலகள் அமைக்கவேண்டும்.சாலை விளிம்பில் அரிப்பு ஏற்பட்மல் இருக்க சிமெண்டாலான தடுப்பும் மழைநீர் வெளியேறும் அமைப்புகளையும் உருவாக்கவெண்டும். அப்போதுதான் சாலைகள் சிறந்ததாக அமையும்.


அப்பாவி
அக் 19, 2024 21:38

அமெரிக்காவில் இதுபோன்ற சாலைகள் 1940 களிலேயே வந்தாச்சு. இவுரு இன்னிக்கி சவால், உதார். முதலில் இருக்குற சாலைகளை பதப் படுத்துங்க. செய்த மாட்டீங்க. அதுல துட்டு அடிக்க முடியாது. புது ரோடு போட்டாத்தான் துட்டு.


கிஜன்
அக் 19, 2024 21:27

சென்னையிலிருந்து ...திருச்சி வரை 8 அல்லது 12 வழிப்பாதை போடமுடியுமா சார் .... விடுமுறை தினங்களில் ...பல மணிநேரம் ஆகிறது .... எங்கள் அரசியல் வாதிகளுக்கு .... ஒரு லாங் டேர்ம் விஷன் கிடையாது ... கொஞ்சம் பேசி அறிவுரை கூறினீர்கள் என்றால் நல்லது ....


nv
அக் 19, 2024 21:15

கனவு காண்பதில் தவறில்லை!! ஆனால் நாம் சென்னையில் இருந்து பெங்களூரு சாலையில் சென்றால், இந்த கனவு நனவாக பல பல ஆண்டுகள் ஆகலாம்!!


spr
அக் 19, 2024 20:51

"வரும் காலங்களில், அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை உருவாக்குவோம்," எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று அறிய வாய்ப்பில்லை என்பதால் சொன்னார் போலும். இன்றைய நிலையிலேயே நம் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பல நேர்மையில்லாதவர்கள்தான் சாலை அமைப்பிற்குப் பொறுப்பேற்கிறார்கள் சிறந்த நிறுவனங்களுக்கு கொடுத்தாலும் எதிர்க்கட்சிகளும் இதர சுயநல சார்புடையவர்களும் இவர்கள் சிறுகுறு பணியாளர்கள் வாய்ப்பை பெரிய நிறுவனங்களுக்குத் தரக்கூடாது என்று போராடுவார்கள்.பெரு நிறுவனங்களும் இந்த அமைப்பையே பணிக்கு அமர்த்துகிறார்கள்அவர்களும் லஞ்சம் கொடுத்த பணம் ஆதாயம் இவை போக மீதமுள்ள பணத்திற்கே சாலை பாலங்கள் அமைக்கிறபடியால் தரம் என்றுமே வாய்ப்பில்லாத ஒன்றே.அமெரிக்கத் தரம் வேண்டாம் இந்தியாவுக்கு என்று ஒரு தரமில்லையா?சாலை கட்டமைப்பில் இலவசக் கழிப்பிடம் அத்தியாவசியம்.தமிழகத்தின் எந்த நெடுஞ்சாலை அமைப்பிலாவது இருக்கிறதா? பொதுவாக இவர் இதுவரையில், இதுபோல சவடால் விடுத்ததில்லை


முக்கிய வீடியோ