உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகப்பெரிய முறைகேடு!

மிகப்பெரிய முறைகேடு!

நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடால் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என அரசு தரப்பில் திரும்ப திரும்ப கூறப்படுகிறது. ராகுல், எம்.பி., - காங்கிரஸ்

நிலையற்ற அரசு!

தற்போது பதவியேற்றுள்ள மத்திய அரசு, கூட்டணி கட்சிகளின் தயவில் தான் நீடிக்க வேண்டும். இப்போதைக்கு இந்த அரசு, திரிசங்கு நிலையில், நிலையற்ற அரசாகத் தான் உள்ளது. அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

நாட்டுக்கு கிடைத்த பெருமை!

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது, நாட்டுக்கு கிடைத்த பெருமை. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதற்காக பெருமைப்பட வேண்டும். பதவியை எதிர்பார்த்து, நான் இந்த கூட்டணியில் இணையவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. ராமதாஸ் அத்வாலே, தலைவர், இந்திய குடியரசு கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்