உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும்: பதவியேற்ற முதல் நாளில் நிதிஷ்குமார் திட்டவட்டம்

இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும்: பதவியேற்ற முதல் நாளில் நிதிஷ்குமார் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹார் ஒன்றாக இருக்கும் என 10வது முறையாக பீஹார் முதல்வராக பதவியேற்ற முதல்நாளில் நிதிஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று, பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில், பீஹாரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பதவியேற்பு விழாவில் நான் முதல்வராக பதவியேற்றேன். இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், பீஹார் மக்களுக்கு எனது வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பீஹாரின் முழுமையான வளர்ச்சிக்கான உறுதியுடன், மத்திய அரசின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநிலத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். பீஹார் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன், நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாநிலத்தை மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.இன்றைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
நவ 20, 2025 22:10

திட்டவட்டம் ரா... இதுக்கு நிதீஷு ஒரு ஜி.ஓ போட்டு அல்லது நம்ம அப்ரசண்டிக வச்சி நடுராத்திரியில் பார்லிமென்ட்ல அவசர சட்டம் போட்ருவாங்களோ...?? நம்மாளுங்க தான்... மொதல்ல அவனுவ பஸ் ஸ்டாப் அப்பிடிங்கறத பஷ்ஷு இஷ்டாப்புன்னு சொல்றதை நிறுத்தட்டும்... அப்புறம் பாக்கலாம்


Nathansamwi
நவ 20, 2025 22:06

கடைசில இருந்தா ?


முருகன்
நவ 20, 2025 21:31

இதுவரை வளரவில்லை என்பதற்கு நன்றி


N Sasikumar Yadhav
நவ 20, 2025 22:06

தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் விஞ்ஞானரீதியான ஊழல் மாதிரி வளராமல் இருக்க வாழ்த்துகள்


vivek
நவ 20, 2025 22:18

நல்ல வேளை...வளர்ந்த மாநிலம் என்று புருடா விடவில்லையே முருகா....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை