உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பில்கிஸ்பானு வழக்கு: குற்றவாளிகள் அவகாசம் கோரி மனு தாக்கல்

பில்கிஸ்பானு வழக்கு: குற்றவாளிகள் அவகாசம் கோரி மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.கடந்த 2002ல் குஜராத்தில் இனக் கலவரம் நடந்தது. அப்போது, 21 வயதான, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது, 3 வயது குழந்தை உட்பட, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் தண்டனை பெற்ற, 11 பேரை முன்னதாகவே விடுதலை செய்து, குஜராத் அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'' 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் 11 பேரும் வரும் ஜன.,21ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ''சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.மனுவில்,''உறவினர்கள் திருமண நிகழ்ச்சி மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சரணடைய அவகாசம் வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்று வழக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

DVRR
ஜன 18, 2024 16:16

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் 1) வெறும் பிஸ்கிஸ் பானு ஒருவர தான் 2002ல் கற்பழிக்கப்பட்டார்????? 2) 2002 வழக்கு, மரணதண்டனை கொடுக்கவில்லை, ஏன் ஆயுள் தண்டனை இந்த 11 பேர்க்கு கொடுத்தீர்கள்???ஆயுள் தண்டனை கற்பழிப்புக்கு இது வரை கேட்கவில்லை எந்த தீர்ப்பிலுm???சரி ஆயுள் தண்டனை என்றால் இறக்கும் வரியா 15 வருடமா???30 வருடமா??? அதன் தீர்வு தான் என்ன????2002 வழக்கு???உங்கள் தீர்ப்பு 2008ல்???6 வருடம் ஒரு சிறிய தீர்ப்பு சொல்ல???இதற்கு உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அநீதிபதிகளே???


Rajesh
ஜன 18, 2024 13:08

இவர்களை தப்பவிட சதித்திட்டம்


Kaju Bhai
ஜன 18, 2024 12:36

தயவுசெய்து அந்த பெண்ணின் புகைப்படம் தவிர்க்கவும்


A1Suresh
ஜன 18, 2024 19:24

ஏன் ?


A1Suresh
ஜன 18, 2024 12:30

நீதிமன்றங்களில் வக்கிரபுத்தி கொண்டவர்களும் அடக்கம் என்பதை இது காட்டுகிறது.


ஆரூர் ரங்
ஜன 18, 2024 12:29

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பே விசித்திரமானது. குஜராத் சிறைகளில் இருந்தவர்கள் சிறை நன்னடத்தை பற்றி மஹாராஷ்டிரா அரசுதான் ஆய்ந்து விடுதலை செய்யலாமாம்????‍????. எனக்குப் புரிந்தது..அறிவியல் தேர்வு விடைத்தாளை வரலாற்றுப் பாட ஆசிரியர் திருத்த வேண்டும் என்று உத்தரவிட்டால்?


ஆரூர் ரங்
ஜன 18, 2024 12:25

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கவர்னர் ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதால் அவர்களுக்கு நீண்ட கால பரோல் வழங்குவது பற்றி மாநில அரசு தீவிரமாக சிந்தித்து வருகிறதாம். அதாவது மறைமுக விடுதலை????? அப்படி செய்யப்பட்டால் அடுத்து இங்கே தாலிபான் ஆட்சிதான்.


தமிழ்வேள்
ஜன 18, 2024 13:16

குண்டு வைப்பவனுக்கு பெரியார் விருது , கலைஞர் விருது கூட கொடுப்பார்கள் ....


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ